இம்ரான் கான் பதவியேற்பில் மோடி?

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 02:05 am
modi-to-attend-imran-khan-s-swearing-in

பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக் - ஈ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றுக்கொள்ளும் விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்துக்ள்ள அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியை வீழ்த்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது இம்ரான் கானின் தெஹ்ரீக் -ஈ-இன்சாப் கட்சி. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் அக்கட்சியின் தலைமை, வரும் 11ம் தேதி இம்ரான் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. 

சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும், இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரதமர் மோடியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது. 

முன்னதாக 2014ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற போது, சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் விழாவிற்கு அழைத்தார். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close