இந்திய பூர்வீகம் கொண்டவருக்கு கணித 'நோபல் பரிசு'

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 09:27 pm
indian-origin-mathematician-awarded-fields-medal

இந்திய பூர்வீகம் கொண்ட ஆஸ்திரேலியரான பிரபல கணிதவியலாளர் அக்ஷய் வெங்கடேஷுக்கு, கணிதத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 

36 வயதான அக்ஷய் வெங்கடேஷ், புதுடெல்லியில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் குடியேறி, கணிதத்தில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் அக்ஷய் வெங்கடேஷுக்கு, கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் உயரிய விருதான ராமானுஜம் விருதை வழங்கி கௌரவித்தது. இந்நிலையில், கணித துறையில் உயரிய விருதான ஃபீல்ட்ஸ் விருதும் அவருக்கு வழங்கப்படுகிறது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகின் தலைசிறந்த கணித மேதைகளுக்கு ஃபீல்ட்ஸ் விருது வழங்கப்படுகிறது. கனடாவின் பிரபல கணிதவியலாளர் ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸின் நினைவாக, 1932ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. வெற்றி பெறுவோருக்கு 15,000 கனடா டாலர்கள் பரிசுத் தொகை கொடுக்கப்படும். வெற்றி பெறுபவர்களில் சிலரை நேரில் விழாவில் பதக்கம் அணிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, வெங்கடேஷ் உட்பட 4 பேருக்கு ஃபீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close