இந்தியர் உள்பட 3 பேரை ஆப்கான் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த பகுதியில், பொதுமக்கள் கடத்தி கொல்லப்படுவதும் வாடிக்கையாகிக்கொண்டு வருகிறது. சர்வதேச உணவகத்தில் வேலை செய்து வரும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், மூவரின் உடல்கள் சடலமாக கிடைத்துள்ளன. இந்த மூன்று பேரில் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். மற்ற இவர்கள் மலேசியா மற்றும் ஐரோப்பாவின் மெசடோனியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக ஆப்கான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மூவரும் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சோடெக்ஸோ உணவகத்தில் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.