வாங்கிய சில நிமிடங்களில் காணாமல் போன ஃபீல்ட்ஸ் விருது!

  முத்துமாரி   | Last Modified : 03 Aug, 2018 04:51 pm
winner-of-top-mathematics-prize-has-medal-stolen-from-him-minutes-later

கணிதத்துறையின் உயரிய விருது,  வாங்கிய சில நிமிடங்களில் காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நோபல் பரிசுக்கு இணையான கணிதத்துறைக்கு அளிக்கப்படும் ஃபீல்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்றது. இந்த முறை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் காவ்சர் பிர்கார் என்பவர் விருதை தட்டிச் சென்றார். அவர் பதக்கத்தை வாங்கியதும் பிரீஃப் கேசில் வைத்து பூட்டியுள்ளார்.  சில நிமிடங்கள் கழித்து அதை திறந்து பார்த்தபோது பதக்கத்தை காணவில்லை.உடனடியாக விழா நடத்தும் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிப்பதிவுகளை பார்த்ததில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளனர்.  நிகழ்ச்சியின் போது அரங்கத்திற்குள்ளே இது போன்று பதக்கம் திருடு போனது இதுவே முதல்முறை என்று நிகழ்ச்சியை நடத்தும் அமைப்பினர் கூறியுள்ளனர். 

பிர்காருக்கு வழங்கப்பட்ட பதக்கம் 14 காரட் தங்கம். இதன்மதிப்பு 4000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2,75,000) என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close