ஈஃபிள் டவரை சுற்றிப்பார்க்க 2 நாட்களுக்கு தடை!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 04:59 pm
eiffel-tower-to-reopen-after-2-day-strike-over-long-queues

கூட்ட நெரிசல் காரணமாக பிரான்ஸிலுள்ள ஈஃபிள் டவரை சுற்றிப்பார்க்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் உலக மக்களின் மனம்கவர்ந்த சுற்றுலா இடமாக திகழ்கிறது. பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் டவரை காண வெளிநாட்டில் இருந்து தினம் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஈஃபிள் டவரை சுற்றி பார்க்க, ஆன்லைனில் பதிவு செய்து நுழைவுசீட்டை பெறலாம் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து கடந்த புதன் கிழமை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள், நேரில் நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்ததால் ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கூட்ட நெரிசலை சமாளிக்கவும், நுழைவுசீட்டு பெற்றவர்கள் பார்வையிடும் வரை வேறு யாரும் நுழையக்கூடாது என்பதாலும் இரண்டு நாட்களுக்கு  ஈஃபிள் டவர் மூடப்பட்டுள்ளது. இதனால்  ஈஃபிள் டவரை பார்க்க இரண்டு நாட்கள் பயணிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் குறைந்த பிறகு வழக்கம்போ திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close