வீக்லி நியூஸுலகம்: 'முதலையுடன் நட்பான கிராமமும்' மற்றும் அவதியுறும் பிளாஸ்டிக் தோல் குழந்தையும்

  Padmapriya   | Last Modified : 04 Aug, 2018 07:17 pm

interesting-world-news-happenings-around-the-world

அரச கிரீடத்தை கொண்டு சென்ற படகு கொள்ளையர்கள் 

ஸ்வீடன் நாட்டின் விலை உயர்ந்த அரச கிரீடங்கள் திருட்டுஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பகுதியில் உள்ள தேவாலையத்தில் 17ஆம் நூற்றாண்டின் அரச பரம்பரை கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளது.  பொது மக்கள் பார்வைக்காக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு தங்க கிரீடங்களை இரண்டு கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். கிரீடங்களை கடத்த முயன்ற போது, தேவாலையத்தின் அபாய மணி ஒலித்துள்ளது. சத்தம் கேட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், கிரீடங்களை கடத்தி கொண்டு மலாரன் ஏரியில் உள்ள விரைவு படகில் ஏறி கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக தேவாலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பல வ விசாரணைகளும் தேடுதல் வேட்டையும் நடந்தாலும், இதுவரையில் கொள்ளையர்களை பிடிக்கவில்லை. பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அரச பரம்பரை கிரீடங்கள் மிக விலை உயர்ந்ததாம் . இது போன்ற கொள்ளை சம்பவங்கள் ஸ்வீடன் நாட்டில் சாதரணமாக நடக்கின்றது. 

பிளீச்சிங் பவுடர் போட்டு குளிப்பாட்ட வேண்டிய குழந்தை: வேதனையுரும் அமெரிக்க -தாய் 
 

அமெரிக்காவைச் சேர்ந்த ரவன் போர்டு என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தை ஒரு பிளாஸ்டிக் பொம்மை போல் உள்ளது. அமிலியா மோயி என்று பெயர் சூட்டப்பட்ட அந்தக் குழந்தைக்கு அபூர்வ தோல் நோய் இருப்பதால் தோல் அவ்வப்போது காய்ந்து காணப்பட்டது.

அதனால் இரண்டு நாளுக்கொரு முறை அந்த குழந்தையை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பிளீச்சிங் போடாவிட்டால் மோயிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுகிறது. அதுமட்டுமின்றி மோயின் தோல் உதிர்வதால் ஈரப்பதத்தை தக்க வைக்க அவளுக்கு எப்போதும் மாய்ச்சரைஷர் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

தற்போது ஒரு வயதாகும் மோயிக்கு இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அவளுக்கு வியர்வை துளைகள் இல்லாததால் எப்போதும் அவளை குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்னைகளால் அவளை ரவன் போர்டு மிகவும் கவனமாக கவனித்துக் கொள்கிறார். பொம்மை போல இருப்பதால் மோயியை வெளியில் கொண்டு சென்றால் பலரும் அவளை கிண்டல் செய்வது வருத்தமளிப்பதாக ரவன் போர்டு தெரிவிக்கிறார். 

2020ல் விண்வெளி சுற்றுலா: ஆயத்தமாகும் அமேசான் 

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோசுக்கு சொந்தமான ப்ளு ஆரிஜின் என்ற நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் விண்கல தயாரிப்பில் இறங்கியுள்ளது. விண்கலத்தின் பலகட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு  வருகிறது. இருப்பினும் சில முறை சோதிக்க வேண்டியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

அநேகமாக 2020-க்கு பின் பயணிகளை சுற்றுலா அழைத்து செய்யும் செயற்கைகோள் தமது முதல் பயணத்தை துவக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கட்டணம் என்பதையும் அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அநேகமாக  ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறுகிறார்கள். விண்கலம் சரியாக இயங்க  கிட்டத்தட்ட 100 பொறியாளர்களும், ஆயிரக்கணக்கான பணியாட்களும் இரவு பகல் பாராமல் கடந்த 3  வருடங்களாக உழைத்து வருகிறார்கள்.

மேலும் 3 ஆயிரம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, விரைந்து பணியை முடித்து, உலகிலேயே முதன்முறையாக விண்வெளி சுற்றுலா மேற்கொண்ட நிறுவனம் என்ற பெருமையை பெற  அமேசானின் நீர் ஜெஃப் பெஸோ திட்டமிட்டிருக்கிறார்.

கடித்த பாம்பை கையோடு கொண்டு வந்த சீன பெண்: ஓடிய மருத்துவர்கள்!

பாம்பு கடித்ததால், அதைக் கையோடு தூக்கிக் கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனை சென்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அதையும் எடுத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

அவரது பாம்பு சுற்றியிருப்பது போன்ற புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து பீப்பிள் டெய்லியில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சீனாவின் ஸிஜியாங் மாகாணத்தில் புஜிங் கவுண்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

1.5 மீட்டர் நீளமுள்ள பாம்பை, தனது மணிக்கட்டில் சுற்றிய படி கொண்டு சென்றுள்ளார். அதிக விஷம் கொண்ட பாம்பு இல்லை என்றாலும், பார்ப்பதற்கு மிகுந்த அச்சமூட்டும் வகையில் அது இருக்கிறது.

நட்பு கொள்ளும் முதலைகள்; முதலைகளை மதிக்கும் கிராமம்!

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினோ ஃபாசோ நாட்டில் பாஸோல் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு வாழும் மக்கள் முதலைகளுடன் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள். அந்த கிராம குளத்தில் சுமார் 150 முதலைகள் வாழ்கின்றன. இருப்பினும் குளத்தில் பெண்கள் சாதாரணமாக துணி துவைக்கிறார்கள், ஆடுகளை மேய்க்கிறார்கள், குழந்தைகள் குளக்கரைகளில் விளையாடுகிறார்கள். இவர்களுக்கு அருகிலேயே முதலைகள் ஓய்வெடுக்கின்றன. சிலர் முதலைகளுக்கு அருகிலோ அல்லது அதன் மீதோ அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

முதலைகள் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றன. 15-ம் நூற்றாண்டில் இந்தக் கிராமத்தில் மழையே இல்லை. எங்கும் வறட்சி நிலவியது. மக்கள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, சில முதலைகள் இந்தக் குளத்தை மக்களுக்கு அடையாளம் காட்டின. அப்போதுதான் இப்படி ஒரு குளம் இருப்பதே அவர்களுக்குத் தெரிந்ததாம். அன்று முதல் முதலைகள் மீது மக்கள் மிகவும் அன்பும் அக்கறையும் காட்டி வருகின்றனர். முதலைகளுக்கு அவ்வப்போது கோழி, இறைச்சி போன்றவற்றையும் வழங்குகிறார்கள். முதலை இறந்து போனால், இறுதிச் சடங்குகளை நடத்தி, புதைக்கவும் செய்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை முதலைகளைக் கொண்டாடும் விதத்தில் திருவிழாவும் இங்கு நடத்தப்படுகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.