இந்தோனேசியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு!!

  சுஜாதா   | Last Modified : 06 Aug, 2018 09:46 am
82-dead-after-powerful-earthquake-strikes

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவு பகுதியில் நேற்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கமானது, அதனை சுற்றியுள்ள  கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இதனை தொடர்ந்து  அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.  கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நில நடுக்கமானது பூமியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால் இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம்  உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் இந்த அபாய எச்சரிக்கை வாபஸ் வாங்கியது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close