இந்தோனேசியாவைத் தொடர்ந்து நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது. இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 91 ஆக உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நிகோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 கி.மீ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சொல்லும் அளவிற்கு பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.