வைரலாகும் மோமோ சேலஞ்ச்: அடுத்த ப்ளூ வேல் கேம் ?

  Newstm News Desk   | Last Modified : 11 Aug, 2018 05:56 am

dangerous-momo-challenge-similar-to-blue-whale

சில மாதங்களுக்கு முன் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இளளஞர்கள்,சிறுவர்கள் மத்தியில் வைரலாக பரவிய ஒரு ஆபத்தான விளையாட்டு புளூவேல். இந்த விளையாட்டால் தமிழகத்தில் கூட ஒருசில தற்கொலை மரணங்கள் ஏற்பட்டது. தற்போது இந்த விளையாட்டு குறைந்துள்ள நிலையில் மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான தற்கொலை விளையாட்டு ஒன்று உலகின் முன்னணி நாடுகளில் வைரலாகியுள்ளது. அது என்ன மோமோ சேலஞ்ச்?

மோமோ சேலஞ்ச் விளையாட்டு ஆன்லைனில் முன்பின் தெரியாத நபருடன் பழகி அதன்பின் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் நுழைந்த யாரும் வெளியே வரமுடியாது. அப்படி வெளியேற முயற்சித்தால் அவர்களை மிரட்டும் விதத்தில் வன்முறையான படங்கள் அவர்களுடைய மொபைலுக்கு மெசேஜ் வரும். அதுமட்டுமின்றி இந்த விளையாட்டில் உள்ளே நுழையும்போது பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட தகவல்களும் வெளியிடப்படும் என்று பயமுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோமோ சேலஞ்ச் விளையாடிய அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் இதில் வந்த மிரட்டல் காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. ப்ளூ வேல் கேம் போலவே இந்த விளையாட்டும் உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில்  கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதினால், இந்த விளையாட்டை உடனடியாக முடக்கி இளைஞர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close