வீக்லி நியூஸுலகம்: இரட்டை இடுப்பு ஜீன்ஸ்....மாமானார் மாமியாரால் சிக்கிய ட்ரம்ப்

  Padmapriya   | Last Modified : 11 Aug, 2018 04:15 pm
interesting-world-news-happenings-around-the-world

மாட்டியும் மாட்டாமல் தெரியும் இரட்டை இடுப்பு ஜீன்ஸ்!

இளைஞர்கள் அதிகம் விரும்பி அணியும் ஜீன்ஸில் பல வகைகளை பிரபல நிறுவனங்கள் வரிசையாக அறிமுகம் செய்கின்றன.  பிரபல Jeans Pant நிறுவனமான r13denim, Spring சீசன் என புதிய ஜீன்ஸ் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

ஜீன்ஸ் பேன்ட் என்றாலே மிகவும் சாதரணமாகவும் அணியலாம் மிக முக்கிய நிகழ்வுகளுக்கும் அணியலாம். அத்தனை ரகங்கள் சந்தையில் உள்ளன. சமீப காலமாக அதில் லோ ஹிப் ஸ்டைல் பேன்ட் இளைஞர்களை அதிகம் ஈர்க்கிறது. பெண்கள், ஆண்கள் என இருத் தரப்பினரும் இதனை விரும்பி அணிகின்றனர். 

ஆனால் இதிலும் புது விதமான பேன்ட்டை தான் r13denim நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனது ஆன்லைன் விற்பனைதளத்தில் 'Double denim' Pant-ஐ இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அனால் இதற்கான விமர்சனங்கள் தான் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. காரணம் இந்த பேன்ட்-ஐ அணிந்து இருப்பவர் உண்மையில் சரியாக அணிந்து இருகின்றாரா? இல்லையா? என பார்ப்பவர்களின் மனதில் கேள்வியை எழுப்பும் அளவுக்கு இதன் டிசைன் உள்ளது. 

அதாவது பேன்ட்-ல் இரட்டை இடுப்பு பட்டை உள்ளது. உள்பட்டையினை மாட்டினால் அதனை சுற்றி உள்ள மற்றொரு பட்டை கீழே தொங்குவது போல் காட்சியளிக்கின்றது. பேன்ட்-ஐ மாட்டாதது போல தெரிகின்றது.  இது தான் விமர்சனத்துக்கு காரணம். இருப்பினும் விற்பனைக்கு குறைச்சலே இல்லை. ஏனெனில் தற்காலத்தில் வித்தியாசமான விஷயங்களை தான் பலரும் விரும்புகின்றனர். விலையை பற்றியும் கவலைபடுவதே இல்லை. 

இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த பேன்ட்-ன் விலை எவ்வளவு தெரியுமா? $695 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் 47934 ரூபாய்.

சீன பெருஞ்சுவர் எங்குள்ளது?- குரோர்பதி நிகழ்ச்சியில் பதில் சொல்ல திண்டாட்டம் 

கோன் பனேகா குரோர்பதி வகைராவில் துருக்கியில் மில்லியனராக யார் விரும்புகிறீர்கள்? என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் சூ ஆய்ஹான் (வயது 26) என்ற பெண் போட்டியாளர் கலந்து கொண்டார்.  இவர் பொருளாதார பட்டப்படிப்பினை படித்தவர்.

நிகழ்ச்சியில் இவரிடம் சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? என கேள்வி கேட்கப்பட்டது.  இதற்கு பதிலளிக்க அவருக்கு சீனா, இந்தியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் என 4 ஆப்ஷன் தரப்பட்டன.  சற்று திகைத்த அவர், பதில் எனக்கு தெரியும்.  ஆனால் உறுதிப்படுத்த பார்வையாளர்களின் லைப்லைனை பயன்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

எனினும் இதில், 51 சதவீதம் பேரே சீனா என பதில் அளித்தனர்.  4ல் ஒரு பங்கினர் இந்தியாவை தேர்வு செய்தனர். இதனால் மேலும் குழம்பிய அவர் 2வது லைப்லைன் பயன்படுத்தும் முடிவுக்கு வந்தார். இந்த முறை தனது நண்பருக்கு தொலைபேசியில் பேசியுள்ளார்.  அவர் சீனா என உறுதிப்பட கூறியுள்ளார்.

இதனால் வெளியேறும் சுற்றில் இருந்து அவர் தப்பினார்.  ஆனால் எளிய ஒரு கேள்விக்கு பதிலளிக்க தவறிய அவரை ட்விட்டரில் பலர் விமர்சித்து வருகின்றனர். படு பயங்கரமான ட்ரால்களுக்கு அவர் ஆளாகியுள்ளார். 

நெட்டிசன்களுக்கு பதிலளித்த அவர், எப்பொழுது தேவையோ அப்பொழுது எனது லைப்லைன்களை நான் பயன்படுத்துவேன் எனக் கூறினார். ஆனால் ஆனால் அடுத்த கேள்விக்கு தவறான பதில் அளித்து போட்டியில் இருந்து வெளியேறினார்.  அதில், புகழ் பெற்ற துருக்கி பாடலின் இசையமைப்பாளர் யார்? என கேட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியேறிகள் குடும்பங்களை பிரித்த ட்ரம்ப்!- மாமானார் மாமியாருக்கு மட்டும் முறைகேடாக குடியுரிமை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியாவின் பெற்றோர் விக்டர்-அமலிஜா நவ்ஸ் இருவரும் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உறுதிமொழியையும் அவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் எடுத்துக் கொண்டனர்.

இவர்கள் சமீபத்தில் தான் கிரீன் கார்டு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரீன் கார்டு பெற வேண்டும் என்பது விதியாகும். ட்ரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விக்டர்-அமலிஜாவுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 

மெக்சிக்கோ வழியாக சட்டவிரோதமாக குடியேறும் கதிகள் விவகாரத்தில் ட்ரம்ப் கடுமையாக நடந்துகொண்டார். குடியேறிகள் குழநதைகள் தங்களது குடுமபத்தினரிடமிருந்து மாதக் கணக்கில் பிரித்து வைக்கப்பட்டனர். சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற கண்டிப்புக்கு பிறகு ட்ரம்ப் தனது உத்தரவை திரும்பபெற்றார். 

ஆனால் தற்போது தனது மாமனார் மாமியாருக்கு சட்டவிரோதமாக குடியுரிமை கொடுத்து ட்ரம்ப் வசமாக மாட்டியுள்ளார்.

விக்கிபீடியாவில் இடம்பெற்ற இம்ரான் கான் நாய்க்குட்டிகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் பிரதமர் வேட்பாளராக நின்று அமோக வெற்றி பெற்றார். விரைவில் பிரதமராக அவர் பொறுப்பேற்கிறார்.  இந்த நிலையில், அவர் வீட்டு நாய்க்குட்டிகள், கோழிக்குஞ்சுகள், பசுக்கள் மற்றும் எருமைகள் குறித்து இணையக் தகவல் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அவற்றின் பெயர், அவை வளர்க்கப்பட்ட காலம் ஆகியவையும் உள்ளன. இதற்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் செல்லப் பிராணிகள் பற்றி விக்கிபீடியாவில் ஒரு கட்டுரை உள்ளது. அவருக்குப் பின் இம்ரான் கானின் செல்லப் பிராணிகள் தான் விக்கிபீடியாவில் இடம்பெற்றிருக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close