• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

வீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோள் கொடுக்கும் அமீரகமும்!

  Padmapriya   | Last Modified : 19 Aug, 2018 03:57 pm

interesting-world-news-happenings-around-the-world

மிரட்டல் விடும் அமெரிக்கா!

அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் துருக்கியில் ஒரு தேவாலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்பு வைத்து உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு அவரை 2 ஆண்டுகளாக சிறையில் வைத்துள்ளது. 

ஆனால் பாதிரியாரை விடுவித்து அமெரிக்கா அழைத்துவர ட்ரம்ப் முனைப்பு காட்டுகிறார். இதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒரு பக்கம் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் பெற்றது, ஈரானிடம் வர்த்தக தொடர்பு வைத்துள்ளது என இதுபோன்ற காரணங்களால் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்தது ட்ரம்ப் நிர்வாகம். 

இதனால் துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அசராமல் துருக்கி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதே போல ஈரானுடன் உறவை முடித்துக்கொள்ள இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

கேரளாவில் மே மாதம் 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் மழை வெளுத்துவாங்குகிறது. அங்கு 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலமே வெள்ளநீரில் மிதக்கிறது. மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திறந்துவிடப்பட்டுள்ளன 

தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலை மாவட்டங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கிறது. தற்போதைய சூழலில் எட்டாயிரம் கோடி சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக முப்படைஇலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் பணி செய்கின்றனர்.  பல முனையிலிருந்து கேரளாவுக்கு உதவிக்கரம் நீள்கின்றது. ஆனாலும் தற்போதைய சூழலில் மனிதாபிமான உதவியே அங்கு பெரும் தேவை. 

இந்நிலையில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல். கேரள வெள்ளத்தினால் உயிரிழந்த மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐக்கிய அரபுகள் அமீரகள் சார்பில் குழு ஒன்று அமைத்துள்ள பிரதமர், ''இந்திய நாட்டிலுள்ள கேரள மாநிலம் கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரங்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியாவிலுள்ள நம் சகோதரர்களுக்கு உதவ மறந்து விடாதீர்கள். எங்கள் நாட்டின் வெற்றிக்கு பங்களித்தவர்கள் கேரள மக்கள் தான். இன்னும் பங்களித்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், ஆதரவளிப்பதற்கும் நமக்கு சிறப்பு பொறுப்புள்ளது. மக்களுக்கு உதவ உடனடியாக ஒரு குழுவை நாங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சியில் ஒவ்வொருவரும் தாரளமாக பங்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.  அமீரகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவும் கேரளா மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறது. 

ஆப்பிள் தகவல்களைச் சுட்ட பலே சிறுவன்!

மெல்பர்னைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அமெரிக்க கணினி நிறுவனமான ஆப்பிளின் மைய நினைவகச் சட்டகத்தினுள் கடந்த ஆண்டில் பலமுறை அனுமதியின்றி ஹேக் செய்ததாக சிறுவனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாக தி ஏஜ் நாளேடு செய்தி வெளியிட்டது. 90 கிகா பைட்டுகள் வரை மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசிய தகவல்களை தனது அடையாளத்தை விட்டுச்செல்லாமல் அவன் பதிவிறக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆப்பிள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான் எப்பிஐ-ஐ நாட, அவர்கள் இதனை ஆஸ்திரேலிய காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். சிறுவனின் வீட்டில் சோதனையிட்டபோது ஆஸ்திரேலிய காவல்துறையினர் பறிமுதல் செய்த இரண்டு மடிக்கணினிகள், ஒரு மொபைல் போன், ஒரு வன்வட்டோடி (hard disk) ஆகியவற்றை ஆராய்ந்தபோது அவன் ஆப்பிள் வலைத்தளத்தை ஹேக் செய்தது உறுதியானது.

ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் அடங்கிய கோப்புகளை “hacky hack hack” என்ற பெயரிலான கோப்பறைக்குள் அவன் சேமித்து வைத்திருந்ததாகவும் நாளேட்டுச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. தனது இந்த தீரச்செயலை வாட்சப்பில் பீற்றியதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆப்பிள் செய்தித்தொடர்பாளர், “அனுமதியின்றி ஒருவர் உட்புக முயல்வதைக் கண்டறிந்த எங்கள் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதனைக் கட்டுப்படுத்தி, சட்டத்துறைக்கு அதனைப் புகாராகவும் அளித்தனர். இதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல் எதுவும் திருடப்படவில்லை” என்று மட்டும் கூறினார்.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதுபற்றி எதுவும் கூற இயலாது என ஆஸ்திரேலிய போலிசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். நீதிமன்ற செய்தித்தொடர்பாளரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தண்டனை வழங்கப்படும் என்பதைத் தாண்டி எதையும் கூற முடியாது என மறுத்துவிட்டார்.

ஜஸ்டின் பீபரை தோற்கடித்த கொரியன் இசைக்குழு!

கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழு BTS, இந்த இசைகுழு பிரபல அமெரிக்க ஊடகமான Billboard-ன் Billboard's Social 50 chart பட்டியலில் தொடர்ந்து 57 வாரங்களுக்கு முதல் இடம் வகித்து வந்தது. முன்னாதாக இந்தப் பட்டியலில் ஜஸ்டின் பீபர் தொடர்ந்து 56 வாரங்களுக்கு முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்தார். இச்சாதனையினை முறியடித்து தற்போது BTS குழு புது சாதனை படைத்துள்ளது.

Billboard's Social 50 என்பது வாராந்திர இசை தர பட்டியல் ஆகும். வாரம்தோறும் இணையத்தில் இசைக்கப்படும் பாடல்கள், இணையத்தில் அதிகம் தேடப்படும் இசைக் கலைஞர்களின் பெயர்களின் அடிப்படையில் இந்த Billboard's Social 50 chart உறுவாக்கப்படுகிறது.

முன்னதாக Justin Bieber-ன் Love Yourself இணையத்தை கலக்கி வந்த நிலையில் இவரது பெயர் தொடர்ந்து 56 வாரங்களுக்கு முதல் இடத்திலேயே இருந்தது. இதற்கிடையில் கொரியன் BTS(Boys Band)-ன் FAKE LOVE பாடல் வெளியான பிறகு, இப்பாடல் Justin Bieber-ன் பாடல்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது.

இந்த இசைக்குழுவுக்கு இன்ஸ்டாகிராமில் 12.3 மில்லியன் பின்தொடர்பாளர்களையும், 15.9 மில்லியன் ட்விட்டர் பின் தொடர்பாளர்களையும் கொண்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று இந்திய பிரஜையாக நிரூபித்த சானியா மிர்சா 

இந்திய டென்னிஸ் வீராங்கணையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  

பாகிஸ்தான் மருமகளாக  சானியா மிர்சா சென்ற பின்பு,  இந்தியா – பாகிஸ்தான் குறித்த எந்த நிகழ்வு என்றாலும் அவரிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புவார்கள்.  இது போல பல்வேறு விமர்சனங்களுக்கு இதுவரை சானியா மிர்சா பதில் அளித்துள்ளார்.

அண்மையில் சானியா மிர்சாவின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர்,  பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14  குறிப்பிட்டு  ''உங்களின் சுதந்திர நாள் இன்று தானே... சுதந்திர தின வாழ்த்துக்கள் சானியா மிர்சா'' என்று குறிப்பிட்டார். 

இதற்கு பதில் அளித்த சானியா என்னுடைய சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15 ) தான்.. என கணவரின் சுதந்திர தின விழா தான் இன்று.  நான் தெளிவாக இருக்கிறேன். உங்களுக்கு  குழப்பாமா? என்று கூறினார்.

சானியாவின் இந்த பதிலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.  இதை மீண்டும் நிரூப்பிக்கும் வகையில் சானியா  ஆகஸ்ட் 15 அன்று ஃபோட்டோ மற்றும் வீடியோ ஒன்று வெளியிட்டு  அசத்தியுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.