வீக்லி நியூஸுலகம்: இறந்த தோழியை மணந்த பெண் மற்றும் 4வது முறையாக தாயாகும் ஆண்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 07:46 pm

interesting-world-news-happenings-around-the-world

அமெரிக்காவின்  உட்டா  மாகாணத்தின் சால்ட் லேக்  நகரை சேர்ந்தவர் போனி போரிஸ்டர் (74). இவர் இளம் வயதிலேயே தனது கணவரை பிரிந்துவிட்டார். இந்த நிலையில் பிவர்லி கிரோசைண்ட் என்ற பெண் இவருக்கு தோழியாகியுள்ளார். இதையடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்து கொண்டு அன்பாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் பிவர்லி உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் போனி நெகிழ்ச்சியான முடிவை எடுத்தார். உலகுக்கு பிவர்லியை தான் திருமணம் செய்து கொண்டேன் என நிரூபிக்க விரும்பி இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.  விசித்திரமான வழக்கை விசாரித்த நீதிபதி, போனியின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த பிவர்லிக்கும், போனிக்கும் திருமணம் நடந்ததற்கான சான்றிதழை வழங்கினார். 

இந்த  மாகாணத்தில் இறந்தவர்களை சட்டபூர்வமாக ஓரின திருமணம் செய்து கொண்டவர்கள் என்று அறிவிக்கும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும் என நீதிபதி கூறியுள்ளார்.

சர்க்கரை நோய்க்கு மருந்து: ரூ.12 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கிய கம்பெனி!

சர்ககரை நோயில் இரண்டு வகை உள்ளது. இன்சுலின் சுரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைவது டைப் 2 சர்க்கரை நோய். பிறக்கும்போதே இன்சுலின் சுரக்காமல் இருப்பது டைப் 1 சர்க்கரை நோய். உலக அளவில் டைப் 2 சர்க்கரை நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் அந்தோனி டேவிஸ் மற்று அவரது அவரது மாணவர் ஹாரி டெஸ்டேக்ரோயிக்ஸ் மற்றும் டான் ஸ்மார்ட் என்ற மூவர் ஸிய்லோ (Ziylo) என்ற சிறிய நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் நோய்க்கான மருந்து ஒன்றை கண்டறிந்தனர்.

இது குறித்து கேள்விப்பட்ட டென்மார்க்கைச் சேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவோ நோர்ஸ்டிக், ஸிய்லோ நிறுவனத்தை 623 மில்லியன் பவுண்ட் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதில், ஸிய்லோ நிறுவனத்தில் 23 சதவிகித பங்குகளை வைத்திருந்த ஹாரிக்கு 143 மில்லியன் பவுண்ட் (அதாவது 12 ஆயிரம் கோடி ரூபாய்) கிடைத்துள்ளது. 

இதனால் ஆராய்ச்சி படிப்பு மாணவரான ஹாரி இந்த ஓரே டீலிங்கில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 

பறவை வாயில் செல்ஃபி! 

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜுவான் வாண்டன் ஹிவர். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவர். நமீபியா நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த இவரது படகில் கூழக்கடா என்றழைக்கப்படும் பெலிகன் பறவைகள் வந்து இளைப்பாறின. 

அதனை பார்த்து உற்சாமடைந்த அவர், அதன் அருகில் சென்று பறவைகளுடன் விளையாட ஆரம்பித்தார். பறவைகளும் இவரோடு ஒன்றி விளையாடின. இவற்றை ஹிவர் செல்ஃபிய எடுத்துக் கொண்டார். பின் வீடியோ பதிவு செய்த அவர், ஒரு பறவையை சீண்டி அதன் வாய்க்குள் தலையை நுழைத்தவாறு செல்ஃபி எடுத்தார். 

இந்த வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் அவர் பதிவேற்றம் செய்தார். அதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஜீவான் மீது நமீபியா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

பாரீசில் திறந்தவெளி யூரினல்!- கடுப்பாகும் பொதுமக்கள் 

பாரீஸ் நகரில் சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ள திறந்தவெளி பொது சிறுநீர் கழிப்பிடங்கள் மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது.  வைக்கோல் நிறைந்த, நாற்றமற்ற இந்த கழிப்பிடங்கள் ஆபாசமானதாக திறந்தவெளியில் இருப்பதாக மக்கள் குறை கூறுகின்றனர். பலரும் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் பாரீஸ் 4வது மாவட்ட மேயர் ஏரியல் வெயில், இது மிக முக்கியமான முயற்சி. இதுவும் இல்லை என்றால் மக்கள் பொதுவெளியை பயன்படுத்துவர். அதற்கு இது சிறந்தது எனக் கூறியுள்ளார். 

4வது முறையாக தாயாகும் ஆண்!

உலகில் குழந்தைபெற்ற முதல் ஆண் மீண்டும் கர்ப்பமாக தயாராகி உள்ளார்.  2002 ஆண்டு தாமஸ் பிட்டியே வெளிப்படையாக அறுவைசிகிச்சை செய்து ஆணாக மாறினார். ஆனால் கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பில் எந்த மாற்றங்களையும் செய்திருக்கவில்லை. அதனால் இவர் செயற்கையாக கர்ப்பமாக கூடிய நிலை இருந்தது. இதன் மூலம் இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் 4வது முறையாக கருவுற தயாராக உள்ளார். 

மேலும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதே தனது விருப்பம் எனக் கூறியுள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.