இன அழிவின் முடிவு: காலமானது உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம்

Last Modified : 22 Mar, 2018 05:32 pm

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யா விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் கடைசி வெள்ளை காண்டாமிருகம் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளது. இனம் அழிந்ததற்கான இதன் இறப்பு செய்தியை சமூக வலைதளங்களில் #RIPSudanRhino என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்துவருகின்றன.

உலகில் 3 ஆண் காண்டாமிருகங்கள் வாழ்ந்துவந்தது. சில வருடங்களுக்கு முன் ஆங்கலிஃபூ என்னும் ஆண் காண்டாமிருகமும் கலிபோர்னியாவின் சான் டியாகோவின் பூங்காவில் இருந்த மற்றொரு காண்டாமிருகமும் இறந்தது. இதையடுத்து கடைசி வெள்ளை காண்டாமிருகமாக சூடான் மட்டும் வாழ்ந்து வந்தது.

உலகிலேயே மூன்று வெள்ளை காண்டாமிருகங்கள் தான் உள்ளன. அவற்றில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் ஆகும். சூடான் மட்டுமே ஆண். கென்யா விலங்குகள் காப்பகத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த சூடான் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

வெள்ளை காண்டாமிருகங்கள் அதிக பட்சம் 50 வருடங்கள் வரை வாழும். சூடானுக்கு 45 வயதாகி விட்டதால், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. மிகவும் நோய்வாய்ப்பட்டு, பலவீனமாக காணப்பட்ட சூடானின் சதைகள், எலும்புகள் சிதைந்தது.

அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது, வலது காலிலும் தொற்று ஏற்பட்டு இருந்தது என ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு கென்யா வந்த இந்த சூடான் மூலம் வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்கை கருவூட்டல் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியை தழுவின.

மூன்று காண்டாமிருகங்களுக்கும் கென்ய அரசு, துப்பாக்கி ஏந்திய ராணுவ பாதுகாப்பு அளித்திருந்தது. இருப்பினும் உடல்நிலை சரியில்லாததால் மீண்டு வரமுடியாமல் இறந்தது. சூடானின் மறைவால் தற்போது இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே உலகில் உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close