வாக்காளர் பட்டியலில் சேர 3 நாட்கள் காத்திருப்பு.... இது நைஜீரியாவில்!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 10:24 pm
lagosians-in-last-minute-rush-as-voter-registration-ends

நைஜீரியாவில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள 3 நாட்களாக மக்கள் வரிசையில் காத்துகிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் போன்ற தீவிரவாதக் குழுக்களின் அட்டகாசம் தலைத் தூக்கியுள்ளது. இதனை ஒழிக்கும் நடவடிக்கை அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் இங்கு அடுத்தாண்டு வரும் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அந்தப் பணி நேற்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கும் எற்பாடு மிகவும் மெதுவாக நடந்தது. அதனால் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படவே, 3 நாட்கள் வரிசையில் காத்து கிடந்த தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். லாகோஸ் என்ற பகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு 3 நாட்கள் வரிசையில் காத்துக்கிடந்துள்ளனர். 

தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 8 கோடி பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை நைஜிரீயாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த அண்டு நடக்க இருக்கும் பொதுத் தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யும் பணி ஆஃப்ரிக்கா நாடான நைஜீரியாவில் நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 20 கோடி மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில், எட்டுக் கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர் என சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. வாக்காளர் பட்டியலில் பேரை சேர்க்கும் ஏற்பாடு மிகவும் மெதுவாக மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக கூறுகிறார்கள் மக்கள். சிலர் மூன்று நாட்கள் வரை வரிசையில் நின்றதாக கூறுகிறார்கள்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close