லிபியாவில் தொடர் கலவரம்: சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

  Padmapriya   | Last Modified : 03 Sep, 2018 07:32 pm
hundreds-of-prisoners-escape-libyan-prison-as-violence-worsens-in-capital


லிபியாவில் மோதல் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி சுமார் 400 கைதிகள் சிறையை தகர்த்து தப்பியோடியுள்ளனர். 

லிபியாவின் தலைநகரான திரிபோலியில் சில தீவிரவாதக் குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களை பயன்படுத்தி அந்த நகரின் அருகே அப்பன் ஜாரா என்ற இடத்தில் இருந்த சிறையின் கதவுகளை உடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் ஏற்பட்ட இரு தரப்பாரின் மோதலாலும், தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால் அவர்களை தடுக்க இயலாமல் போனதாக கூறப்படுகிறது. 

தென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த கைதிகள் பெரும்பாலும் இறந்த லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

லிபியாவில் கடந்த ஒருவாரமாக தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.  லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் சர்வாதிகாரி கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடந்தது.  அதில் கடாஃபி கொல்லப்பட்டார் அதோடு அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அங்கு சிறு சிறு தீவிரவாத குழுக்கள் முளைத்துள்ளதால் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close