படம் பேசுது: வேட்டையாடிய 'மனிதமும்' பிரிய முடியா 'மிருகமும்' 

  Padmapriya   | Last Modified : 04 Sep, 2018 05:30 am
heartbreaking-picture-shows-baby-rhino-perched-next-to-dead-mother-killed-for-her-horns

தென்னாப்பிரிக்காவில் கடத்தல் கும்பலால் கொம்புக்காக வேட்டையாடிக் கொல்லப்பட்ட காண்டாமிருகத்தின் பிரிவை தாங்க முடியாத அதன் குட்டி   இறந்த இடத்தையே சுற்றித் திரியும் நெகிழ்ச்சியான படம் ஒன்று காண்போரை கவலையடைய செய்கிறது. 
 
விலங்குகளின் ரோமம் மற்றும் கொம்புகளை வேட்டையாடி  கடத்தும் கும்பல் அரியவகை பெண் வெள்ளை காண்டாமிருகத்தை கொன்றதோடு அதன் குட்டி காண்டாமிருகத்தையும் தாக்கியுள்ளனர். ஆனால் அந்த குட்டி காண்டாமிருகமோ தாயின் பிரிவை தாங்கமுடியாமல் பூங்காவில் அலைந்து திரிந்து வருகிறது.
 
தென்னாப்பிரிக்காவில் குரூஜர் தேசிய பூங்கா அமைந்துள்ளது அங்கு உள்ள அரியவகை வெள்ளை நிற பெண் காண்டாமிருகம் ஒன்று குட்டி ஒன்றை ஈன்றது. அந்தக் குட்டிக்கு ஆர்தர் என்று பெயர்வைத்து செல்லமாக பார்த்துவந்தனர் பூங்கா நிர்வாகத்தினர். பின்னர் அந்தக் குட்டியும் காட்டுப் பகுதியில் தாயுடன் விடப்பட்டது. 

இந்த நிலையில் அந்த பெண் காண்டாமிருகம் சர்வதேச கொள்ளைக்கார கும்பலால் அதன் ரோமம் மாற்றும் கொம்புகளுக்காக கொல்லப்பட்டது. அப்போது அருகில் இருந்த அந்த குட்டி காண்டாமிருகத்தையும் அந்த கும்பல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். 

குட்டி காண்டாமிருகத்துக்கு கொம்பு முளைக்காததால் அதை தாக்கிவிட்டு மட்டும் சென்றுவிட்டனர். இறந்த தாயின் பிரிவை தாங்கமுடியாத ஆர்தர் அது   இறந்த இடத்திலேயே படுத்துக் கொண்டுள்ளது. அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட படக் காட்சி தான் காண்போரை கலங்க வைத்துள்ளது. -

அதனை அந்த இடத்திலிருந்து மீட்கவே அதிகாரிகளுக்கு சிரமமாக இருந்ததாக கம்பிரியா விலங்குகள் பூங்கா தலைமை செயல் அதிகாரி கேரன் புரூவர் கூறியுள்ளார். 

இந்த நிலையிலிருந்து சிறிது காலத்தில் ஆர்தர் மாறும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close