ஓரே வாரத்தில் 90 யானைகள் படுகொலை: ஆப்பிரிக்க நாட்டில் அட்டூழியம் 

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2018 08:56 pm
nearly-90-elephants-found-dead-near-botswana-sanctuary-killed-by-poachers

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்மானாவில் ஓரே வாரத்தில் 90 யானைகள் அதன் தந்தத்திற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்மானாவில் ஒரே வாரத்தில் 90 யானைகள் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் யானை தந்தங்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் அதற்கான வேட்டையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 

ஆப்பிரிக்காவில் உயிரியல் ஆய்வாலரான மைக் சேஸ் என்பவர் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போது போட்ஸ்வானா நாட்டின் வனப் பகுதியில் பல்வேறு இடங்களில் யானைகள் கொல்லப்பட்டு கிடந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த யானைகள் அனைத்தும் கடந்த ஒரு வார காலகட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த யானைகள் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் தந்தம் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதன்படி 87 யானைகளும் 3 அரிய வகை வெள்ளை காண்டாமிருகங்களும் கொல்லப்பட்டு கிடந்துள்ளன.   அவற்றின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவம் உயிரியல் ஆய்வாலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் போட்ஸ்மானாவில் தான் அதிக அளவில் யானைகள் வாழ்கின்றன. இந்த நாட்டில் சமீபகாலமாக யானைகளும் காண்டாமிருகங்களும் அதன் ரோமங்கள் மற்றும் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close