ஜப்பானை சுழற்றி அடித்த ஜெஃபி சூறாவளி; 7 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2018 06:10 am
cyclone-jebi-makes-landfall-in-japan-7-dead

கடந்த 25 ஆண்டுகள் காணாத சக்தி வாய்ந்த ஜெஃபி சூறாவளி, ஜப்பானின் பல்வேறு பகுதிகளை தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேதத்தில் 7 பேர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

ஜப்பானின் டொக்குஷிமா பகுதியில், ஜெஃபி சூறாவளி நேற்று கரையை கடந்தது. தெற்கு மற்றும் மேற்கு ஜப்பான் பகுதிகளை இந்த சூறாவளி கடுமையாக தாக்கியது. கட்டிடங்கள், கார்கள், போக்குவரத்து சேவைகள் என கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளில் 7 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்நாட்டின் கிங்கி பகுதியில் விமானம், ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன. 

கோபி என்ற பகுதிக்கு அருகே, சூறாவளி ஜப்பான் கடலுக்குள் சென்றதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 209 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close