வீக்லி நியூஸுலகம்: பாம்பு, பல்லியுடன் சாப்பிடலாம்.... ரோபோவும் ஆயுதம் ஏந்தி சண்டை போடலாம்!

  Padmapriya   | Last Modified : 08 Sep, 2018 11:05 pm

interesting-world-news-happenings-around-the-world

பூச்சுகள் சத்தமிடுவதாக புகார்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸூக்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிக்சரெஸ்கியூ என்ற கிராமத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள், அக்கிராமத்தின் மேயரிடம் புகார் ஒன்று அளித்தனர்.

அதில், 'அந்த பகுதி முழுவதும் உள்ள மரங்களில் வாழும் பூச்சிகள் மற்றும் வண்டுகள் அதிகளவில் சப்தம் இடுவதால் மிகவும் தொந்தரவாக உள்ளது' என்று கூறியிருந்தனர். இதுகுறித்து வானொலியில் பதிலளித்த மேயர் ஜியார்ஜஸ் ஃபெர்ரேரோ, இந்த சப்தம் புதிதாக வந்த சுற்றுலா பயணிகளுக்கு தொந்தவராக இருக்கலாம், ஆனால் இது எங்கள் கிராமத்தின் சங்கீதம் என்பதை நீங்கள் உணரவில்லை' என்றார்.

மேலும், 'பூச்சி மருந்தைக் கொண்டு சில சுற்றுலா பயணிகள் அவற்றைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது முட்டாள்தனமானது மேலம் கண்டனத்துக்கு உரியது. இந்த சப்தத்தை புதிதாக வருபவர்கள் எதிர்த்தால் பரவாயில்லை, ஆனால் பூர்வீக குடிமக்களே இதனை தொந்தரவாக நினைப்பது எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது' என்றார்.

எதிரிகளை தாக்கக் கூடிய ராணுவ ரோபோ!

மாஸ்கோவில் நடந்த 'சர்வதேச ராணுவ கண்காட்சி - 2018'ல், ராணுவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ரஷ்யாவின் கலாஷ்நிகோவ் என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ரஷ்யாவின் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனமான இது, ஏகே.47 துப்பாக்கிகளை அறிமுகம் செய்த பெருமைக்குரியது.

எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவுக்கு, 'இகோரெக்' என பெயரிடப்பட்டுள்ளது. இது நடந்து சென்று எதிரிகளுடன் சண்டையிடும் திறன் பெற்றது.

இது கையில் ஆயுதங்களை வைத்து எதிரிகளை தாக்கும். இந்த ரோபோவின் ஒரு பகுதியில் கேபின் ரூம் இருக்கும். இதில் பைலட் ஒருவர் அமர்ந்து கொண்டு, ரோபோவை இயக்க வேண்டும். கேபினுக்குள் இருக்கும் பைலட், எதிரிகளால் தாக்கப்படாமல் இருப்பதற்காக, கேபின் ரூம் புல்லட் புரூப் செய்யப்பட்டுள்ளது. ரோபோ 13 அடி உயரம் கொண்டது. எடை 4,080 கிலோ. ரோபோவை மேலும் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாழ்த்த வருவோர் 1 லட்சம் கொண்டுவரவும்!

கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது திருமணத்துக்கு வருவோர் ரூ.1  லட்சம் கொண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கும்போதே நிபந்தனை வைத்துள்ளார். இதனை பலரும் ஏற்காத நிலையில் அவர் தனது திருமணத்தையே நிறுத்துவிட்டார். 

கனாடாவைச் சேர்ந்த சூசன் என்ற பெண் தான் இவ்வாறு நூதன வழியை பின்பற்றியுள்ளார். ஆனால் திருமணத்துக்கு 4 நாட்களுக்கு முன் தன்னுடைய கனவு திருமணத்தை நிறுத்திவிட்டார். 

திருமணத்துக்கு வருபவர்கள் சுமார் 1 லட்சம் ரூபாயைப் பரிசாக அளித்து, தன்னுடைய கனவு திருமணத்தை நடத்துவதற்கு உதவும்படி கேட்டிருந்தார். ஆனால் 10 பேர் மட்டுமே அவர் கேட்ட தொகையைக் கொடுத்திருந்ததால், மனம் உடைந்து போய் கல்யாணத்தையே நிறுத்திவிட்டார். 

"ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் லட்சியம், கனவு. ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. நானும் என் வருங்காலக் கணவரும் சேர்ந்து உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டுத் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். இணையதளத்தில் திருமணம் குறித்து தகவல் வெளியிட்டேன். பலரும் நல்ல யோசனை என்று என்னைப் பாராட்டி, உதவுவதாகவும் சொன்னார்கள். அதனால் திருமணத்துக்கான இடம், உணவு, உடை என்று அத்தனையும் முடிவு செய்தோம். திருமண அழைப்பிதழை அனுப்பி, முன்கூட்டியே 1 லட்சம் ரூபாய் திருமணப் பரிசைக் கொடுத்துவிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் முதலில் வாக்குறுதி கொடுத்தவர்களில் 10 பேரே பணத்தை அனுப்பி வைத்தனர். இதனால் மிகவும் மனம் உடைந்து போய்விட்டேன். 

நான்கில் ஒரு பங்கு பணத்தை வைத்துக்கொண்டு, திருமணத்தை நடத்த முடியாது என்பதால், வேறுவழியின்றி 4 நாட்களுக்கு முன் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தேன். இதைப் பார்த்து நிதி திரட்ட சிலர் முயன்றனர். அவர்களாலும் நிதி சேகரிக்க இயலவில்லை. நாங்கள் இருவரும் எங்கள் உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டோம்" என்று கூறியுள்ளார். 

குறையாத எம்ஜிஆர் மவுசு...

மலேசியாவில் இடைத் தேர்தல் ஒன்றுக்கான பிரசாரத்தின் போது எம்ஜிஆரின் ''நான் ஆணையிட்டால்...'' பாடலுக்கு டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்தார்  பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். மலேசியாவின் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் டெசோ மெந்தாரியில் நேற்று நடைபெற்றது.

இந்த பிரசாரத்தின் போது கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. நம்ம ஊர் பாணியில் எம்ஜிஆர் வேடமிட்ட ஒருவர் எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாடலுக்கு சவுக்குடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த பிகேஆர் தேசியத் தலைவர் அன்வர் திடீரென அந்த நபருடன் இணைந்து எம்ஜிஆரைப் போல டான்ஸ் ஆடினார். இதை பார்த்த பொதுமக்கள் கைதட்டி உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
 

பாம்பு, பல்லியுடன் சாப்பிடலாம்..

கம்போடியாவில் பாம்பு, பல்லி, தேள்,உடும்பு போன்ற ஊர்வனவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டி உணவகம் ஒன்று வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

The reptile cafe என்று பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் உணவை மட்டுமல்லாமல், எந்த உயிரினத்துடன் நேரம் செலவிட விரும்புகிறார்களோ அவற்றையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வித்தியாசமான இந்த உணவகத்திற்கு வருகைதரும் வாடிக்கையாளர்கள் காபி உள்ளிட்ட பானங்களை அருந்திக் கொண்டே பாம்புடன் விளையாடி செல்பியும் எடுத்து மகிழ்கின்றனர்.

வியாபாரத்தை பெருக்கும் நோக்குடன் இந்த யோசனையை செயல்படுத்தியுள்ள உணவக உரிமையாளர், வாடிக்கையாளர்களின் வருகை படிப்படியாக அதிகரிப்பதாக கூறியுள்ளார்.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.