சுறுசுறுப்பான உகாண்டாவாசிகள்....மந்தமான இந்தியர்கள்: உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் தகவல்

  Padmapriya   | Last Modified : 09 Sep, 2018 06:49 pm
world-s-laziest-nations-revealed

உலக சுகாதார நிறுவன ஆய்வின் முதில் உலக நாடுகளில் சுறுசுறுப்பான மனிதர்கள் உகாண்டா நாட்டு மக்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவன ஆய்வு அறிக்கையில் இது குறித்து கூறிப்பிட்டிருப்பதாவது, ''சுறுசுறுப்பான மனிதர்கள் பற்றிய ஆய்வு, 168 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் உகாண்டா முதலிடம் பெற்றுள்ளது.

உகாண்டாவாசிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இங்குள்ள, 95 சதவீதம் பேர் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 5.5 சதவீதத்தினர் உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை. 

117வது இடத்தில் இந்தியா

இந்தப் பட்டியலில், இந்தியா, 117வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. இதனால், உடல் ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் மிக மந்த நிலையில் இருப்போர் அதிகம். கடைசி இடம் பெற்றுள்ள குவைத் நாட்டில் 68 சதவீதம் பேர் உடற்பயிற்சியை பற்றி நினைத்து கூட பார்ப்பதில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் 32 சதவீத பெண்களும் 23 சதவீத் ஆண்களும் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஈடுபடாமல் அந்த நாடு இந்தப் பட்டியலில் 46வது இடத்தில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே போல 36 சதவீத பிரிட்டன்வாசிகள் அத்தியாவசிய 150 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபடாமல் அதில் 40 சதவீத பெண்களும் 32 சதவீத ஆண்களும் மந்த நிலையோடு இருக்கின்றனர் என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. சைக்கிள் ஊட்டுவது, ஓடுவது, சுறுசுறுப்பாக நடப்பது என 150 நிமிடங்கள் உடற்பயிர்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close