சினிமா பாணியில் சிறையில் தாக்குதல்; 100 கைதிகள் தப்பியோட்டம்!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 06:07 am
brazil-105-convicts-escape-after-jail-stormed-by-gangs

பிரேசில் நாட்டின் பரைபா பகுதியில் உள்ள அந்நாட்டின் மத்திய சிறையை குறிவைத்து சில ரவுடி கும்பல்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 105 கைதிகள் தப்பி ஓடினர்.

பரைபாவின் தலைநகர் ஜோ பெஸோவா என்ற நகரத்தில் அமைந்துள்ள பிரேசில் நாட்டின் மத்திய சிறையின் வெளியே நேற்று திடீரென 4 வாகனங்களில் மர்ம நபர்கள் குவிந்தனர். துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அவர்கள் தாக்குதல் நடத்த, சிறை காவலர்களுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தன பாதுகாப்பு சாவடிகள் மற்றும் நுழைவு வாயில் கடுமையாக சேதமடைந்தது. தாக்குதலை தொடர்ந்து, சிறையில் இருந்து 105 கைதிகள் தப்பி ஓடினார்கள். 

அவர்களில் 38 பேரை மீண்டும் பிடித்துள்ளதாக பரைபா சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், அருகே உள்ள ஒரு சாலையை மர்ம நபர்கள் முடக்கினர். அப்போது அங்குள்ள ஒரு போலீஸ் அதிகாரியை அவர்கள் சுட்டனர். 36 வயதான போலீஸ் அதிகாரி குண்டடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு சம்பவங்களும் தொடர்பு உடையதாக போலீசார் சநதேகிக்கின்றனர். 

இந்த சம்பவத்தால், பரைபா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close