ஓட்டுநர் இல்லா கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 12:44 am
driver-free-cars-intoduced-in-australia

ஓட்டுநர் இல்லா கார்களை புதிய தொழில்நுட்பம் மூலம் நவ்யா வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. புதிதாய் வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள் இனி ஆஸ்திரேலிய சாலைகளில் பார்க்கமுடியும். 2019க்குள் இக்கார்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் அற்ற கார்களை முதன்முதலில் இயக்கும் உலக நகரங்களில் ஒன்றாக விளங்கப் போகும் பெருமையை பெறுகிறது ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தின் தலைநகரம் பெர்த். ஓட்டுநர் இல்லாத இந்த காரை தேவைப்படும்போது எந்த நேரத்திலும் கைகளாலேயே நிறுத்திக் கொள்லாம்  'சாப்ரோன்' என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கார் தயாரிக்கப் பட்டுள்ளது. 

இந்த காரில் ஆறுபேர் அமர்ந்து செல்ல முடியும். இது அதிகப்பட்சமாக 90 கி.மீ வேகத்தில் ஓடுமாம். ஆனால் சோதனை ஓட்டங்களின்போது இதன் வேகம் 50 கி.மீ. செல்லும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

2019ல் இந்த காரின் சோதனைகள் முடிவடைந்த பிறகு  ஒரு சாதாரண டாக்ஸி போல பயணிகள் தொலைபேசி ஆப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் சுலபமாக அவர்கள் செல்லும் இடத்திற்கு பயணம் செய்யலாம் என ஆஸ்திரேலிய பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close