முதல் முறையாக விமானம் ஓட்டும் பணியில் கால் பதிக்கும் சவூதி பெண்கள்!

  முத்துமாரி   | Last Modified : 14 Sep, 2018 12:48 pm
saudi-airline-flynas-to-recruit-female-co-pilots

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதையடுத்து, விமானம் ஓட்டும் பணியில் பெண்கள் கால்பதிக்க உள்ளனர். 

சவூதி அரேபிய அரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டு வந்த பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான கல்வி உரிமை, வாக்களிக்கும் உரிமை, பெண்களை பொது நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி, வாகன ஓட்டுநர் உரிமை வழங்குதல், கார் ஓட்ட அனுமதி, தொழில் தொடங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சவூதி பெண்கள் விமானம் ஓட்டும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சவூதியில் பெண்கள் விமானியாக பணியாற்றும் படிப்பு படித்திருந்தாலும், விமானத்தில் பணியாற்ற அந்நாட்டு பெண்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக மற்ற நாடுகளில் இருந்து தான் பெண்கள் வேலைக்காக வரவழைக்கப்படுவார்கள். 

இந்த நிலையில், ரியாத்தை சேர்ந்த ஃபிளைநாஸ்(Flynas) என்ற விமான நிறுவனம் தங்கள் விமானத்தில் பணியாற்ற அந்நாட்டு பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. துணை பைலட், உதவியாளர் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பெண்கள் 1000க்கும் அதிகமானோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விண்ணப்பங்கள் குவிந்து  வருவதால் இது உலக நாடுகள் இதனை வெகுவாக வரவேற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close