பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மங்குட் புயல்: 25 பேர் பலி 

  Padmapriya   | Last Modified : 16 Sep, 2018 05:55 pm
typhoon-mangkhut-kills-at-least-28-as-it-smashes-through-philippines-and-heads-for-hong-kong

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

பிலிப்பைன்ஸின் லுசான் தீவை 'மங்குட்' புயல் நேற்று தாக்கியது. இந்தப் புயல் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் தொடங்கி 305 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியது. கடுமையான கன மழையும் பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பதுத்தியது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் மின் கம்பங்களும் சாய்ந்து மின்வினியோகம் முடங்கியது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பல்லாயிரகணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  புயலுக்கு 2 மீட்பு படை வீரர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அதோடு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. புயல் காரணமாக, பிலிப்பைன்ஸில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தடைபட்டுள்ளன. கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த புயலின் பிடியில் 40 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு துரிதப்படுத்தியுள்ளது. தொடரும் நிலாச்ச்சரிவுகளால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்தாண்டின் மிக சக்திவாய்ந்த சூறாவளி புயலாக 'மங்குட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close