நைஜீரியாவில் கனமழை - நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி 

  Padmapriya   | Last Modified : 18 Sep, 2018 06:36 pm
at-least-100-dead-in-nigeria-flooding-after-weeks-of-rain

நைஜீரியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டு 100க்கும் அதிகமானோர் பலியாயானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ்  உள்ளிட்ட நாடுகளில் மழை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் அதிகமான மாகாணங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. 

அங்குள்ள நைஜர் மற்றும் பென்யூ நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது. இவற்றில் நைஜர் மாகாணம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

இங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியானதாக அந்நாட்டு பேரிடர் மீட்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

கன மழை தொடர்வதால் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண முகாம்களுக்கு மக்களை கொண்டு வருவதும் சிரமமான காரியமாக உள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close