வீட்டு கூரைக்குள் விழுந்து சண்டையிடும் 2 மலைப்பாம்புகள்!- வைரல் வீடியோ 

  Padmapriya   | Last Modified : 19 Sep, 2018 10:44 pm
fighting-snakes-fall-into-bedroom-attack-captured-on-facebook-live

ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் கூரைக்குள் விழந்த 2  மலைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணி சண்டையிடும் வீடியோ காட்சி வைராளாக வளம் வருகிறது. இந்த வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் புறநகர் வனப்பகுதிக்கு இடையே வசித்து வரும் பெண் ஒருவர் தனது வீட்டின் பயன்படுத்தாத அறையில் பெரிய சத்தம் கேட்டதை அடுத்து அங்கு ஓடி சென்று பார்த்தார். அப்போது 2 மலைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அட்டையால்வீட்டின் மேற்கூரை மீது விழுந்த பாம்பின் எதைத் தாங்காமல் அவை கிழிந்த நிலையில் பாம்புகள் அறைக்குள் விழுந்து கிடப்பதை அவர் உணர்ந்தார்.

பின்னர் அவர் வனச்சரக அதிகாரிகளை வரவழித்தார். அப்போது அந்த பாம்புகள் இரண்டும் ஒன்றாக ஆடி சண்டை போட்டு கொண்டிருந்ததை பார்த்த பாம்புபிடி அதிகாரி அதனை பேஸ்புக்கில் வீடியோவாக லைவ் செய்துள்ளார்.  வீடியோவில் பேசும் லேனா ஃபீல்டு என்ற பெண் அதிகாரி ஒருவர், அந்த இரு பாம்புக்களும் இணை சேர முயற்சிக்கவில்லை, அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதாகவும் மிகவும் குறும்புத்தனமாக ஒன்றோடு ஒன்று மோதி அதில் யார் பலம் வாய்ந்தவர் என நிரூபிப்பதாக கூறியுள்ளார். பொதுவாக பெண் மலைப்பாம்புகளை ஈர்க்க இத்தகைய செயல்களில் பாம்புகள் ஈடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மலைப்பாம்புகள் இரண்டும் ஆசுவாசமடையும் வரை காத்திருந்த பாம்புபிடி நிபுணர்கள் பின்னர் அதனை பிடித்து காட்டின் உட்பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டுள்ளனர். 

வீடியோ உதவி: யூஎஸ்ஏ டுடே

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close