வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 12:11 pm
vietnam-president-tran-dai-quang-passed-away

வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 61. 

வியட்நாம் நாட்டின் அதிபராக  தாய் குவாங் கடந்த 2016ம் ஆண்டு பதவியேற்றார்.  முன்னதாக அவர் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ராணுவத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வியட்நாம் நேரப்படி காலை 10.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close