விர்ஜினியாவில் அபூர்வ இரட்டைத் தலை பாம்பு!- (வீடியோ)

  Padmapriya   | Last Modified : 24 Sep, 2018 03:29 pm
rare-two-headed-snake-found-in-flowerbed

விர்ஜினியாவில் இரட்டைத்தலை கொண்ட அபூர்வ வகை பாம்பு பிடிபட்டுள்ளது. இதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து பாதுகாத்து வருகின்றனர். 

விர்ஜினியாவில் உள்ள உட்பிரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் இரட்டைத்தலையுடன் கூடிய பாம்பு ஒன்று வெள்ளிக்கிழமை காணப்பட்டது. அதனைக் கண்ட குடியிருப்புவாசிகள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரட்டைத்தலை பாம்பை தேடி அதனை உயிருடன் பத்திரமாக பிடித்தனர். 

இந்த விவரம் விர்ஜினியாவில் பரவ அதனைக் காண மக்கள் கூட்டமாக குவிந்தனர். வனத்துறையினர் இரட்டைத்தலை பாம்பின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளனர். இந்தப் படங்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

இரட்டைத் தலை பாம்பின் உடல் செம்பு நிறத்தில் தாமரைப் பூ போல உள்ளதாக அதனைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டைத்தலை பாம்பின் விஷம் மிகவும் வீரியத் தன்மையானது என வனஉயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அபூர்வ வகையிலான இந்த பாம்பு அரிதாக உள்ளதால் விர்ஜினியாவில் கடத்தல்காரர்களிடமிருந்து இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

வீடியோ உதவி: யூஎஸ்ஏ டுடே
Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close