வயிறை அகற்றும் முன் பிரியாணி வேண்டும்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஆசை

  Padmapriya   | Last Modified : 25 Sep, 2018 02:45 pm
man-eats-biryani-before-getting-his-cancer-affected-stomach-removed

வயிறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துபாய் இளைஞர் தனது வயிறு அகற்றபடும் முன் கடைசியாக பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட உருக்கமான சம்பவம் நடைபெற்றுள்ளது. 

துபாயைச் சேர்ந்த இளைஞர் குலாம் அப்பாஸ். இவருக்கு வயிற்றில் நீண்ட நாட்களாக வலி இருந்தது. அதோடு அவரது உடல் எடையும் வேகமாக குறைந்தது. இதனால் பயந்த அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு வேகமாக வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டறிந்தனர். இதற்காக இவருக்கு நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டி பெரியதாகி அவரது வயிற்றையே ஆக்கிரமித்தது. இதனால், வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதே சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதற்கு குலாம் அப்பாஸ் ஒப்புக்கொண்டார். ஏனெனில் வயிறு இல்லாமல் வாழலாம். உயிருடன் சிரமங்களை சந்தித்து தனது குழந்தைகளுக்காக வாழ நினைப்பதாகவும் மருத்துவர்களிடம் ஒப்புதல் அளித்தார். 

ஆனால், வயிறு அகற்றப்படுவதற்கு முன் தனது மனைவி கையால், தனக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியை கடைசியாக சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தார். மருத்துவர்கள் ஒப்புதலின்படி குலாம் அப்பாஸ் மனைவி சமைத்துக் கொண்டுவந்த பிரியாணியைக் கடைசியாக அவர் வயிறு முட்ட ருசித்துச் சாப்பிட்டார். 

சில பரிசோதனைகளுக்கு பின் விரைவில் அவருக்கு அருவை சிகிச்சை செய்து வயிறு அகற்றப்பட உள்ளது. புற்றுநோய்க்காக முழு வயிறுமே அகற்றப்படுவது இதுவே முதல்முறை என லேப்ரோஸ்கோபி நிபுணர் அலி கம்மாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், வயிற்றில் இரைப்பை அல்லது வேறு ஏதேனும் உறுப்பு நீக்க அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அப்பாஸ் கூறுகையில், என் இரண்டு குழந்தைகளும் நான் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்கள் வளர்ந்து நல்ல நிலைமைக்கு வருவதை நான் பார்க்க வேண்டும். அதுவரை உயிருடன் இருக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக தெரிவித்தார். 

வயிறு அகற்றப்பட்ட பிறகு அவர் வாழ்க்கை கடினமாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் இனி திரவ உணவுத்தவிற வேறு எதையும் சாப்பிட முடியத நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close