வீக்லி நியூஸுலகம்: 200 இடங்களில் காணாமல்போன இந்தியா; பெரியது எது? முடிவுக்கு வந்த ஆய்வு

  Padmapriya   | Last Modified : 29 Sep, 2018 01:31 pm
interesting-world-news-happenings-around-the-world

200 இடங்களில் காணாமல்போன இந்தியா! 

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை 'டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 200 இடங்களில் எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என்பது தான் அதிரவைக்கிறது. இந்தியாவில் கல்வித்துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 22-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில், இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 251-க்கும், 300-க்கும் இடையிலான இடத்தை பிடித்துள்ளது. 

தரவரிசையில் 1,000 வரையிலான பட்டியலில் 49 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட இதில் 7 பல்கலைக்கழகங்கள் கூடுதலாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது 


உலகின் பெரியது இது தானாம்!- முடிவுக்கு வந்த ஆய்வு

உலகிலேயே மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் மிகப்பெரியது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். 
இந்த யானைப் பறவையை 'வரோம்பி டைட்டான்' என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கிழக்கு ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் இந்த வரோம்பி டைட்டான் பறவையின் எலும்புகள், முட்டைகள், எச்சங்கள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டன.  அது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பறவையின் எடை ஏறக்குறைய 860 கிலோ இருந்திருக்கலாம் எனவும் சராசரியாக 650 கிலோ எடை வரை இருந்திருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பறவை மடகாஸ்கர் தீவில் 19-ம் நாற்றாண்டில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

ஒப்பீட்டுக்காக ஒட்டச்சிவிங்கியின் உயரம் வரை இந்தப் பறவை இருந்திருக்கலாம், ஆனால் பறக்கும் சக்தி இந்தப் பறவைக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு காரணம் எடையாக கூற முடியும் எனவும் குறிப்பட்டுள்ளனர்.   மேலும் இந்தப் பறவையின் முட்டை கோழி முட்டையைக் காட்டிலும் 160 மடங்கு பெரிதாக இருந்திருக்கும் என்றும் தற்போது வாழ்ந்து வரும் நெருப்புக் கோழியைக் காட்டிலும் 20 மடங்கு பெரிதாக வரோம்பி டைட்டான் பறவை வாழ்ந்திருக்கலாம். ஆய்வாளர்கள் யூகிக்ககின்றனர். 

மனித இனம் வாழத் தொடங்கியதும் அங்கு இந்த இனம் அழித்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. வரோம்பி டைட்டான் பறவை ஆய்வு குறித்த அறிக்கை லண்டனில் உள்ள விலங்கியல் சமூகம் (ஜூவாலஜிக்கள் சொஸைட்டி) பேராசிரியர் ஜேம்ஸ் ஹேன்ஸ்போர்டு என்பவரால் ராயல் சொஸைட்டி ஓபன் சையின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

பெரியாவர் முதல் சிறியவர் வரை பார்க்கும் 'பேபி ஷார்க்' பாடல்

பேபி ஷார்க் என்ற குழந்தைகளை கவரும் பாடல் யூடியூபில் உலக அளவில் அதிகபடியாக பலரும் பார்க்கப்பட்ட பாடலாக உள்ளது. பல  ஆண்டுகளாககுழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்ட பாடலாக இருந்த பேபி ஸார்க் என்ற பாடல், 2016-ம் ஆண்டு இசை, கிராஃபிக்ஸ், அழகிய குழந்தைகளின் நடன அசைவுகளின் மூலம் பிங்க்ஃபாங்க் (pinkfong) என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.

யூடியூபில் மட்டும் அப்பாடல் 175 கோடிக்கும் அதிகமான  முறை பார்க்கப்பட்டுள்ளது. 

ஜெர்மனியில் உலகின் முதல் 'ஹைட்ரஜன் ரயில்' - மாசை குறைக்க வழி!

கார்டியா ஐலிண்ட்' எனப்படும் இந்த ரயில் தற்போது வடக்கு ஜெர்மனியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரயிலை உருவாக்குவதற்கும், இயக்குவதற்கும் கூடுதல் செலவு ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதால் ஜெர்மனி இதனை தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த ரயிலை பிரான்ஸின் அல்ஸ்டாம் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. 

தற்போது 2 ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 95 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மேலும் 14 ரயில்களை தயாரித்து இயக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனில் மற்ற நகரங்களில் பெரும்பாலும் டீசல் ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த ரயிலானது நிரப்பப்பட்டுள்ள ஹைட்ரஜனில் இருந்து மின்சாரம் தயாரித்து அந்த மின்திறன் மூலம் இயங்குகிறது.  ஒரு முறை ஹைட்ரஜன் நிரப்பினால் இந்த ரயில் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயிலை அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகம் வரை இயக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஹைட்ரஜன் ரயிலானது கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

பூமியைப் போல இன்னும் 2 உலகங்கள்!

கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு, பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ‘சிக்னஸ்’ நட்சத்திர கூட்டத்திற்கு அருகே இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்கள் பலவும் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது சர்வ சாதாரணம் என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும், இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவால் அனுப்பப்பட்டுள்ள டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் செயற்கைகோள் மூலமாகவே இந்தக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரெட்டார்ஃப் நட்சத்திரத்திற்கு அருகில் இரண்டாவது வேற்றுலகம்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கிரகம் பூமிக்கு ஒப்பிடக்கூடியது ஆனால் சற்று பெரியது என்றும், அதன் நட்சத்திரத்தைச் சுற்றி மிகக் குறைவான சுற்றுப்பாதைக் காலமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close