இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராகிறார் ஆடம் முஸ்சேரி

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 01:27 pm
facebook-names-its-new-head-of-instagram

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் புதிய தலைவராக ஆடம் முஸ்சேரி இன்று பதவியேற்கிறார்.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போல தகவல்களை பகிரும் சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது.  சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள பரவலாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் புகைப்பட செயலி அங்கமாகும். இன்ஸ்டாகிராமை 2012ஆம் ஆண்டு 1 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் வாங்கியது. குறைந்த காலகட்டத்தில் அதிக கணக்குகளை இந்த தளம் கொண்டது. தற்போதைய நிலவரப்படி இன்ஸ்டாகிராமை 253 மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர்.  

இந்த நிலையில்  இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனர்களாக இருந்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் கடந்த வாரம் திடீரென பதவி விலகுவதாக அறிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து புதிய தலைவராக ஆடம் முஸ்சேரி பதவியேற்கிறார்.  

இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கை, எங்களது நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள ஆடம் முஸ்சேரி இன்றிலிருந்து அதன் தலைவராகிறார் என்பதை அறிவித்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவர் முஸ்சேரி.  

ஆடமின் அவரது தலைமையின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, முன்னேற்றம் அடையும் என நம்புகிறோம். அவரது தலைமைப் பண்பில் நாங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று  சிஸ்ட்ரோம் மற்றும் கிரீகர் தெரிவித்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close