ஈராக் அதிபரானார் பார்ஹம் சாலிஹ்; பிரதமரும் தேர்வானார்

  Padmapriya   | Last Modified : 03 Oct, 2018 08:28 pm
new-iraq-president-barham-saleh-names-adel-abdul-mahdi-as-pm

ஈராக்கின் புதிய அதிபராக பார்ஹம் சாலிஹ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் குர்திஸ் இனத்தைச் சேர்ந்த குர்திஸ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலாஹியும் குர்திஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர். 
இந்த தேர்தலில் பர்ஹாம் சலாஹ் பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பர்ஹாம் சலாஹ் அந்நாட்டின் இரண்டு முக்கிய குர்து கட்சிகளிடையே நடந்த வாக்கெடுப்புகளின் இறுதியில், அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.

குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி மற்றும் குர்திஸ்தான் தேசப்பற்று சங்கம் ஆகியவற்றுக்கிடையே நடந்த முரண்பாடு காரணமாக வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டதாக ஷியா பிரிவின் சட்டமன்ற உறுப்பினர் ஹமித் அல் மவ்சாமி தெரிவித்துள்ளார். 

58 வயதான பார்ஹம் சாலிஹ் அந்நாட்டின் மதவாத அரசியல்வாதி ஆவார். பிரிட்டனில் பொறியியல் கல்வி பயின்றவர். மேலும் ஈராக்கின் குர்திஸ் மாகாணத்தின் பிரதமராகவும், ஈராக் கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை பிரதமராகவும் இருந்திருக்கிறார்.

பிரதமரும் தேர்வு 

பின்னர் மாதக்கணக்காக கிடப்பில் போடப்பட்ட பிரதமர் பதவிக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த அதேல் அப்துல் மாஹ்தியை புதிய அதிபர் பார்ஹம் சாலிஹ் தேர்வு செய்தார். 

2003 ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்கப் படையால் சதாம் உசேன் வீழ்த்தப்பட்ட பிறகு, ஷியா, சன்னி, குர்து பிரிவினர் அதிகாரத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.இவற்றில் அதிகாரம்மிக்க பதவியான பிரதமர் பதவியை ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களும், நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியை சுன்னி பிரிவினரும், அதிபர் பதவியை குர்து இனத்தைச் சேர்ந்தவர்களும் வகித்து வருகின்றனர். 

இருப்பினும் திடீரென ஐஎஸ் பயங்கரவாதக் குழுக்கள் முளைத்து எழுச்சி பெற்று கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். இதனால் வன்முறைக்கு குறைவில்லாமல் இருந்தன. பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பிறகு, அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஜூலை 12-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் சில முரண்பாடுகள் எழுந்ததை அடுத்து வாக்குகளை எந்திரங்கள் மூலம் எண்ணாமல், நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 

இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, வாக்குகள் கைகளால் எண்ண வேண்டும் என நாடாளுமன்றம் உத்தரவிட்டது. இதன் பின் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close