அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 03:29 pm

nobel-price-for-peace-announced

2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில், அமைதிக்கான நோபல் பரிசு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டெனிஸ் முக்வேஜா, ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

போரில் பாலியல் வன்கொடுமை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்டுகிறது என்பதை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக போராடியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மருத்துவம்,வேதியியல் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close