இந்திய - நேபாள எல்லையில் மிதமான நிலநடுக்கம்! 4.5 ரிக்டர் எனப் பதிவு!

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 05:56 pm
earthquake-measuring-4-5-hits-india-nepal-border

இந்தியா - நேபாளம் எல்லைப்பகுதியில் இன்று 4.5 ரிக்டர் என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - நேபாளம் எல்லைப் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகள் என பதிவாகியுள்ளது. பிற்பகல் 12:45 மணியில் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய புவியியல் அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close