• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

வீக்லி நியூஸுலகம்: நோபல் பரிசு பெறும் முன்னாள் பாலியல் அடிமையும் அந்தரத்தில் தொங்கி சினிமா பார்க்கும் தொழில்நுட்பமும்!

  Padmapriya   | Last Modified : 06 Oct, 2018 05:49 pm

interesting-world-news-happenings-around-the-world

நோபல் பரிசு பெறும் முன்னாள் பாலியல் அடிமை 

இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு காங்கோவைச் சேர்ந்த டாக்டர் டெனிஸ் முக்விகே (63) ஈராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராட் (25) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 

அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பை, ஐரோப்பிய நாடான, சுவீடனைச் சேர்ந்த, நோபல் பரிசுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. "ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து உயிர் பிழைத்து தப்பி வந்தவளான எனக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு  யாசிதி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது" என்கிறார் நாடியா முராத்.  இராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளான இராக்கின் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் நாடியா.

இராக்கின் கோஜோ கிராமத்தில் வரலாற்று ஆசிரியராக ஆக வேண்டும் என்ற கனவில்  தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நாடியா, 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் படை எடுப்பால் தாய் உட்பட தனது அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் இழந்து தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். நாடியாவுடன் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான  இளம்பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். 

அங்கு அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அடிமைகளாக்கப்பட்டனர். அவர்கள் மீது  கூட்டு பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டது. சுமார் 8 மாதம் மொசூலில் இந்த கொடுமைகளை அனுபவித்து வந்த நாடியாவுக்கு அன்புக் கரம் நீட்டியது அவர் சிறைக்கைதியாகப் பிடித்து வைக்கப்பட்ட இடத்தில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று. அந்தக் குடும்பத்தினர் யாஷிக்கு போலியான இஸ்லாம் அடையாளங்களை அழித்து ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து தப்பிக்க உதவி செய்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பின் பாலியல் துன்புறுத்தலிருந்து இருந்த தப்பித்து வந்து தற்போது அவர்களுக்கு எதிராகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் தொடர் குரல் கொடுத்து தற்போது விருதுகளால் அடையாளப்படுத்தப்படும் நபராக வளர்ந்திருக்கிறார் நாடியா. நோபல் பரிசு மட்டுமல்லாது, இதற்கு முன்னர் இவர் கிளிண்டன் க்ளோபல் விருது, ஸ்பெயின் ஐ.நா. அமைப்பின் சார்பாக அமைதிக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

''The Last Girl" என்ற புத்தகத்தையும் இவர் எழுதியிருக்கிறார். அதில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தனது போராட்டத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பூமியின் சுற்றுபாதையில் செயற்கைகோள் குப்பைகள்: நாசா கவலை

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஒன் வெப்  உள்பட பல விண்வெளி நிறுவனங்கள் மிக அண்மைக் காலத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை புவியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பேவதாக சபதம் மேற்கொண்டுள்ளன. ஆனால், இது பல நெருக்கடிகளையும், ஆபத்துக்களையும் தோற்றுவிக்கும் என நாசா எச்சரிக்கின்றது.

இது தொடர்பாக நாசா தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில், அனுப்பப்படும் செயற்கைகோள்கள்  தமது நடவடிக்கைகளை முடித்ததும் அதனை திரும்பபெற  வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.தற்போது கிட்டத்தட்ட 4,000 செயற்கைக் கோள்கள் புவியைச் சுற்றியவண்ணமுள்ளன.இதில் வெறும் 1,800 மட்டுமே செயற்படுநிலையில் உள்ளன. பல நிறுவனங்கள் பூமிக்கான இணையத் தொடர்புகளை  அதிகரிக்கும் நோக்குடன் செயற்கைகோள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ்  ஆனது 12,000 இணையத்தள செயற்கைகோள்களை  அனுப்ப  அனுமதி கோரியுள்ளதுடன், ஒன்வெப்  ஆனது 720  செயற்கை கோள்களுக்கு  அனுமதி பெற்றதற்கும் மேலாக 1,260 செயற்கை கோள்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.

இவையனைத்தும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமாயின் அப்போது உள்ள செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதிலும் நான்கு மடங்காக இருக்கும். இது பெரிய செயற்கைகோள் மோதல்களுக்குக் காரணமாகலாம் என நாசா எச்சரிக்கிறது. நாசா இது தொடர்பாக மேற்கொண்டிருந்த ஆய்வின்  அடிப்படையில், கிட்டத்தட்ட 99 வீதமான செயற்கை கோள்கள்  அவற்றின் செயற்பாட்டுக் காலம் முடிவடைந்ததும் திரும்பப்பெறப்பட வேண்டும் என விவாதமொன்றை முன்வைத்துள்ளது.

இளைஞரை கோடாரியால் வெட்டி சமைத்து உண்ட காதலர்கள்!

ரஷ்யாவை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்டது. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிறுமியின் வீடு அமைந்திருக்கும் சோச்சி பகுதியில் இருந்து 1500 மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுமி, 22 வயதுள்ள இளைஞருடன் வசித்து வருவதாக தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில், "நான் ஒரு வேட்டைக்காரனை விரும்புகிறேன். நான் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். அவரை தவிர வேறு யாரும் எனக்கு தேவையில்லை" என்றும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வுட்டன் கிராமபுற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து புகை வருவதாக ஒருவர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது, மனித மூளை சமைக்கப்பட்ட நிலையிலும், உடலின் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளார்.

பின்னர் இதில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமி கோடரியை கொண்டு அலெக்சாண்டர் போபோவிச் என்ற 21 வயது இளைஞரை கொலை செய்ததாகவும். சிறுமிக்கும் இதில் உடந்தையாக 22 வயதான வேட்டைக்காரன் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த சிறுமியை வேட்டைக்காரன் ஒன்றாகவே வாழ்ந்திருப்பதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இதில் குற்றவாளியின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இதில் ஈடுபட்ட சிறுமி, தற்போது பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அந்தரத்தில் தொங்கியபடி 4ஜி முறையில் படம்!- முதன்முதலாக இங்கிலாந்தில் அறிமுகம்

அந்தரத்தில் தொங்கியபடி 4ஜி முறையில் படம் பார்க்கும் வசதி இங்கிலாந்தில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. 4 ஜி இஇ (4GEE) என்ற நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் 20 பேர் வரை அமர்ந்து படம் பார்க்க முடியும். இதற்காக கிரேன் ஒன்றின் உதவியோடு சுமார் 100 அடி உயரத்தில் ஆடி அசைந்தபடி படம் பார்க்க முடியும்.

நொறுக்குத் தீனி தேவைப்பட்டால், ட்ரோன் மூலம் அவை தியேட்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குட்டித் தியேட்டரில் பிரத்யேக கழிப்பறை வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.