சீனாவுக்கு மோடி அணிவித்த வைர நெக்லஸ்!

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2018 02:45 pm
india-s-necklace-of-diamonds-garlanding-china

மோடி பிரதமராக வந்த பிறகு உலகளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் என்னவெனில் சீனாவின் முத்துமாலையை என்ன செய்யப்போகிறார்? என்பதே உலகளவில் விவாதிக்கபட்டு வந்தது. ஆனால், இப்பொழுதோ சீனா மீடியாக்களில் மோடி சீனாவுக்கு அணிவித்துள்ள வைர நெக்லஸை ஜின் பிங் என்ன செய்ய போகிறார் என்று விவாதிக்கும் அளவிற்கு இந்தியாவை பலப்படுத்தி வைத்து இருக்கிறார் மோடி.

மோடி சீனாவுக்கு வைர மாலை அணிவித்ததோடு இல்லாமல், சீனா இந்தியாவுக்கு சூடிய முத்துமாலையையும் கூடவே அறுத்து எறிந்து விட்டார் என்றே கூற வேண்டும்.. அது என்னப்பா? முத்துமாலை, வைர நெக்லக்ஸ் என்று அள்ளி விட்டுக்
கொண்டு வருகிறாய் என்று கேட்கிறீர்களா..? இதற்கு பதிலை மன்மோகன்சிங்கின் ஆட்சியில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளின் துறைமுகங்களை கைப்பற்றி அங்கு நவீனமயமாக்கி பாதுகாத்தல் என்கிற திட்டத்தை முத்துமாலை என்கிற பெயரில் சீனா தன்னுடைய ராணுவ தளங்களை அமைத்து வந்தது. 

இந்தத்துறைமுகங்கள் அமைத்து இருக்கும் இடங்களை உற்று நோக்கினால் அது இந்தியாவின் கழுத்தில் இருக்கும் மாலை போன்ற தோன்றியதால் இந்தியாவின் கழுத்தில் சீனா போட்டுள்ள முத்துமாலை என்று பொருளாக்கப்பட்டு விட்டது. இந்த
முத்து மாலையின் மூலம் இந்தியா- சீனா இடையே போர் வந்தால் சீனா முத்துக்கள் என்று சொல்லப்படும் துறைமுகங்களில் இருந்து இந்தியாவை சீனா எளிதாக தாக்கும் என்று சொல்லப்பட்டது.

ஏனென்றால் சீனாவின் இந்த முத்துமாலை திட்டத்தில் உள்ள துறைமுகங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு மிக அருகாமையில் இருக்கும் துறைமுகங்கள்..எதுவெல்லாம் தெரியுமா? 

மியான்மரின் க்யாக்ப்யூ துறைமுகம், வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகம், இலங்கையில் ஹம்பன் தோட்டாதுறைமுகம் மாலத்தீவுகளின் மரோ அடோல் துறைமுகம், பாகிஸ்தானில் க்வாடர் துறைமுகம் என்று இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளின் துறைமுகங்களை சீனா கைப்பற்றிக்கொண்டது. பதிலுக்கு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன்
சிங் இதைப் பற்றிய செய்திகளுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு நின்று கொண்டார்.. 

ஆனால் மோடி பிரதமராக வந்த பிறகு, மியான்மருக்குச் சென்று க்யாக்ப்யூ துறைமுகத்திற்கு வடமேற்கில் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிட்வீ துறைமுகத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்..இந்த மியான்மர் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான நாடு..

காரணம் என்னவென்றால் அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு வட கிழக்கு மாநிலங்களின் எல்லைகள் மியான்மர் என்கிற பர்மாவோடு பின்னிப்பிணைந்து உள்ளது. அதனால் ஒட்டு மொத்தமாக மியான்மரை குத்தகை எடுத்து இந்தியாவின் கஸ்ட்டிக்கு கொண்டு வந்தால் தான் வேலைக்கு ஆகும் என்பதை
அறிந்து இருந்த மோடி இதற்காக ஒரு திட்டம் போட்டார்.

இது தாங்க கலாடன் மல்டி ப்ராஜெக்ட்.  இது வட கிழக்கு மாநிலங்களுக்கு மோடி கொடுத்த கிப்ட் என்றே கூறலாம். குறிப்பாக மிசோரம் மாநிலத்துக்கு இது ஒரு வரம் என்றே கூறலாம். இந்த கலாடன் திட்டப்படி கொல்கத்தாவில் இருந்து மியான்மரின் சிட்வீ துறைமுகம் இணைக்கப்பட்டு, கலாடன் ஆற்று வழியாக  சென்று மியான்மரில் பலிட்வாவில் இந்தியா உருவாக்கி வரும் ரோடு வழியாக மிசோரமின் சோரின்புரிக்கு நுழைந்து, அப்படியேமிசோரமின் தலைநகர் அய்சாலுக்குள் நுழைந்துவிடலாம். 

இதனால் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவு பயணமாக இருந்த கொல்கத்தா- மிசோரம் தொலைவு இனி பாதியாக குறைந்து விடும் என்று சொல்லப்பட்டாலும் கலாடன் ப்ராஜெக்ட்டின் முக்கிய நோக்கம்ஒட்டுமொத்த மியான்மர் நாடும் இந்தியாவின் கஸ்ட்டிக்கு வர வேண்டும் என்பதே...

ஆக மியான்மரின் க்யாக்ப்யூ துறைமுகத்தினை சீனா கைப்பற்றினாலும், அதற்கு மேலே சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிட்வீ துறைமுகத்தை இந்தியா கைப்பற்றி இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்து விட்டது.

அடுத்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுத்தை நோக்கி மோடி பார்வையை பதித்தார். வங்கதேசத்தில் சிட்டகாங் துறைமுகம், பெய்ரா துறைமுகம், சொனாடியா துறைமுகம் என்று மூன்று துறை முகங்களில் சீனா கால் வைத்து இருந்தது. இதை முறியடிக்க நினைத்த மோடி இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இடையில் 45 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை பிரச்சினைகளை இதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

இதனால் இந்தியா சில நிலப் பகுதிகளை வங்க தேசத்துக்கு தாரை வார்க்க நேர்ந்தாலும் இதை முன்வைத்து மோடி சிட்டகாங், பெய்ரா மற்றும் சொனாடியா துறைமுகங்களில் சீனா ஊண்றியிருந்த காலை உடைத்து விட்டார்.அதாவது சிட்டங்காங் துறைமுக த்தை மேம்படுத்தி கூடவே பெய்ரா மற்றும் சொனாடியா துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டத்தை முறியடித்து சீனாவின் கான்ட்ராக்டில் இருந்த பெய்ரா துறைமுக உருவாக்கத்தை இந்தியாவின் கஸ்ட்டடிக்கு கொண்டு வந்தார்.

அதோடு சொனாடியா ப்ராஜெக்ட் கேன்சல் செய்யப்பட்டது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனா மேம்படுத்திய சிட்டங்காங் துறை முகத்தை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியா சரக்குகளை கொண்டு செல்லும் உரிமையை வங்கதேசம் இந்தியாவுக்கு வழங்கியது.

கூடவே வங்கதேசத்தின் மங்ளா துறைமுகத்தையும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள வங்கதேசத்தின் பிரதமர் இந்தியாவுக்கு வழங்கியுள்ளார். ஆக, இந்தியாவின் தலையில் சீனா சூடிய முத்துமாலையில் இந்தியாவின் கழுத்துக்கு வெகு அருகில் இருந்த இரண்டு முத்துக்களான மியான்மர் மற்றும் வங்கதேசம் நாடுகளில் இருந்த துறைமுகங்களை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முத்து மாலையின் இரண்டு முத்துக்களை உதிர வைத்தார்..
 

அடுத்து இலங்கை பக்கம் கண்ணை வைத்த மோடி ராஜபக்சே ஆட்சியில் ஒட்டுமொத்த இலங்கையையும்  சீனா கைப்பற்றி ஹம்பன் தோட்டா துறைமுகத்தையும் மட்டாலா விமான நிலையத்தையும் உருவாக்குதல் என்கிற பெயரில் ஒட்டுமொத்த இலங்கையையும் சீனாவுக்கு எழுதிக்கொடுத்து இருந்தார் ராஜபக்சே.

இதனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் விமான ங்கள் இலங்கையில் நிரந்தரமாக இருக்க வைக்கப்பட்டு  இலங்கையை சீனாவின் காலணி நாடு என்கிற நிலைமைக்கு ராஜபக்சே. இந்த நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிறது.

இந்த நேரத்தில் மோடியின் அரசியல் ராஜதந்திரத்தை பற்றி சிறிதாக எடுத்து வைக்கிறேன்.ராஜபக்சே தான் இலங்கையில் மீண்டும் அதிபர் ஆவார் என்று உலகமே நம்பிய நிலையில் மோடி விளையாடிய அரசியல் விளையாட்டை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

இந்தியாவிலேயே மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஒன்று சேர முடியவில்லை. ஆனால் மோடி இலங்கையில் ராஜபக்சேவை வீழத்த நடத்திய அரசியல் விளையாட்டுக்களை நினைக்கும் பொழுது அடுத்த நாட்டின் அரசியலையே மாற்றியவருக்கு உள்நாட்டு அரசியலை உடைக்க சொல்லியா தரவேண்டும்?

இலங்கையில் ராஜபக்சேவுக்கு கீழே சுகாதார அமைச்சராக இருந்த மைத்ரி பாலஸ்ரீ சேனாவை ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளராக கொண்டு வந்து அவருக்கு இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவையும் ராஜபக்சேவின் கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின்
ஆதரவையும் கூடவே தமிழ் தேச கூட்டமைப்பின் ஆதரவையும் கிடைக்க வைத்து ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பிய மோடியை பற்றி இலங்கையின் அரசியல் வரலாறு என்றும் தன்னுடைய பக்கங்களில் எழுதி வைத்து இருக்கும்.

ராஜபக்சே வீட்டுக்கு போனதும் அவர் சீனாவுக்கு எழுதி வைத்த ஹம்பன் தோட்டா துறைமுகம் வெறும் வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிற அளவில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு இந்த துறைமுகத்தின் பாதுகாப்பை இலங்கையே எடுத்துக் கொண்டு அதையும் இந்தியா இலங்கைக்கு அளித்த போர் கப்பல்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது.

சீனா முழு அளவில் முதலீடு செய்து இலங்கையில் உருவாக்கிய ஹம்பன் தோட்டா துறைமுகத்தையும்  மட்டாலா விமான நிலையத்தையும் இந்தியா கைப்பற்ற கடுமையாக போராடியது. இதில் ஹம்பன் தோட்டா துறைமுகத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமே என்கிற நிபந்தனையுடன் சீனாவுக்கு இலங்கை அளித்தாலும்  தற்கு வெகு அருகாமையில்
இருக்கும் மட்டாலா ஏர்போர்ட்   இந்தியா கையக படுத்தி உள்ளது.

5 வருடத்திற்க்கு முன் இந்தியா இலங்கையில் நுழைய முடியாமல் இருந்த நிலை மாறி இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கிய துறைமுகத்திற்கு அருகிலேயே உள்ள விமான நிலையத்தில் இந்தியா பாய் விரித்து படுத்துக்கொண்டது. அதுமட்டுமன்றி கொழும்பு துறைமுக அபிவிருத்தி திரிகோணமலை துறைமுக விரிவாக்கம் என்று இலங்கையை இந்தியா ஆக்ரமித்து வருகிறது.

ஆக, மியான்மர், வங்கதேசம், இலங்கை என்று மூன்று நாடுகளில் உள்ள சீனாவின் துறைமுகங்களான முத்துக்களை முத்து மாலையில் இருந்து மோடி உதிர்த்து விட்டார்.

அப்புறம் மாலத்தீவுகளில் இருக்கும் மரோ அடோல் துறைமுகம். இங்கு நிச்சயமாக சீனாவின் மிலிட்டரி தளம் இருக்க வாய்ப்புள்ளது. இதுவரை மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இன்று வரை செல்லாத நாடு மாலத்தீவு தான். இதன் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் ஒரு முழு நேர சீனக் கைக்கூலி.  அதனால், ராஜபக்சே மாதிரியே யாமீனும் இந்தியா எதிர்ப்பு வேலைகளையே செய்து வந்தார். அதனால் இலங்கையில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ராஜபக்சேவை  வீட்டுக்கு அனுப்பியது மாதிரியே மாலத்தீவுகளிலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அப்துல்லா யாமீனை வீட்டுக்கு அனுப்பி
விட்டார் மோடி.

அடுத்த மாதம் தான் புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சோலிக் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநேகமாக எந்த ஒரு அயல்நாட்டு அதிபரோ, இல்லை பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாத மோடி முதன் முதலில் மாலத்தீவு நாட்டின் அதிபர் பதவியேற்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருக்கிறார். இனி மாலத்தீவுகளும் இந்தியாவிடம் மண்டியிட்டு வணங்கி நிற்கும்.

எனவே மியான்மர், வங்கதேசம், இலங்கை மற்றும்மாலத்தீவுகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால் இந்த நான்கு நாடுகளிலும் சீனாஇந்தியாவுக்கு எதிராக  சுற்றி இருந்த முத்து மாலையை மோடி அறுத்து விட்டார் என்றே கூறலாம்.எஞ்சியிருப்பது பாகிஸ்தானில் இருக்கும் குவாடர் துறைமுகம் மட்டுமே..அதை இன்னும் சில வருடங்களில் உடைத்து சுக்கு நூறாக்கி விடுவோம்..

இப்பொழுது மோடி சீனாவுக்கு எதிராக கோர்த்துள்ள வைர நெக்லசை பற்றி பார்ப்போம்...ஈரானின் சாபாகர் துறைமுகம் 2016ல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. ஓமன் நாட்டின் டக்ம் துறைமுகம் 2018 பிப்ரவரியில் இந்தியாவின்
கஸ்ட்டிக்கு வந்தது. அடுத்து செசல்ஸ் நாடுகளில் இருக்கும் அசம்சன் தீவு துறைமுகம் இந்த வருடம் அதாவது 2018 ஜூன் மாதத்தில் இந்தியாவின்ஆளுமைக்கு வந்தது.

இதில் ஈரானின் சாபாகர் துறைமுகம் பாகிஸ்தானில் சீனா கைப்பற்றி உள்ள குவாடர் துறைமுகத்திற்கு வெகு அருகில் சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் தான் .ஆக, பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தை நாம் ஈரானில் இருந்து கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம்.

இந்த ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகம் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த அரபிக் கடலும் இந்த துறைமுகத்தின் கண்காணிப்பில் தான் இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிரிக்க நாடான டிஜி போட்டியில் இருக்கும்  சீனாவின் கடற்படை தளத்தில் இருந்து அரபிக் கடல் வழியாக இந்திய கடல் எல்லையில் சீனாவின் கப்பல்கள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து செசல்ஸ் தீவின் அசம்சன் தீவு துறைமுகம் இருக்கிறது அல்லவா..இது தான்  இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டி இருக்கும் நாடு. இந்த துறைமுகத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு சீனா விரித்து இருந்த பட்டுப்பாதையை இந்தியா சுருட்டிவீசி இந்திய பெருங்கடலில் அழித்து விட முடியும். இந்த துறைமுகத்தை இந்தியா கடற்படை தளமாக பயன்படுத்த செசல்ஸ் 2018 ஜூலையில் தான்அனுமதி அளித்தது.

அடுத்து சிங்கப்பூரின் சாங்கி துறைமுகத்தை இந்தியா கடற்படை தளமாக பயன் படுத்தி கொள்ளகடந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூர் அரசு இந்தியாவுக்கு அனுமதி கொடுத்து இருந்தது.சில மாதங்க ளுக்கு முன் சிங்கப்பூர் சென்று இருந்த மோடி சாங்கி துறைமுகத்தில் தங்கியிருக்கும் இந்திய கடற்படை வீரர் களோடு கை குலுக்கி நின்றதை மறந்து விட வேண்டாம்..

இந்த சாங்கி துறைமுகத்தில் இருக்கும் இந்திய கடற்படை  சீனாவின் தென் சீன கடலில் இருந்து இந்திய பெருங்கடலில் மலாக்கா நீரிணை வழியாக நுழையும் சீன கப்பல்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.

அடுத்து இந்தோனேசியாவின் சாபாங் துறைமுகமும் இந்த வருடம் தான் இந்தியாவின் கடற்படை தளமானது. தென் சீனக்கடல் வழியாக கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நுழைய இரண்டு வழிகள் உண்டு ஒன்று மலாக்கா நீரிணை இன்னொன்று சுந்தா நீரிண. மலாக்கா நீரிணை சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது. சுந்தா நீரிணை இந்தோனேசியாவுக்கு வெகு அருகில் இருக்கிறது.

ஆக, தென் சீனக்கடலின் வழியாக இந்தியப்பெருங்கடலுக்குள் நுழையும் இரு வாசல்களிலும் உள்ள துறைமுகங்களில் இந்தியா கடற்படை தளம் வைத்து இருக்கிறது. இதற்கு மேல் மோடியின் சாதனைக்கு என்ன வேண்டும்?

இது தான் மோடியின் துணிச்சல் .சீனா மாதிரி துறைமுகம் மேம்பாடு என்று கூறி மியான்மர், வங்கதேசம், இலங்கை மாலத்தீவுகளில் உள்ள துறைமுகங்களை கைப்பற்றி அங்கு ரகசியமாக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட விரும்ப வில்லை. மாறாக பகிங்கரமாகவே அந்த நாடுகளை வைத்து எங்கள் நாட்டு துறைமுகங்களை இந்தியா மிலிட்டரி
நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் என்று அறிவிக்க வைத்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாது, சீனாவுக்கு வடக்கில் இருக்கும் உலான்பாட்டரில் உள்ள ராணுவ முகாமில் இந்திய ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். சீனாவுக்கு கிழக்கே ஜப்பானில் இந்திய போர் கப்பல்கள் இருக்கிறது. அடுத்து சீனாவுக்கு தெற்கில் வியட்நாமில் அதி நவீன சேட்லைட்  கண்காணிப்பு மையம் அமைத்து கூடவே  இந்தியா போர் கப்பல்கள் பிரமோஸ் ஏவுகணைகள் வைத்து இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

சீனாவை சுற்றி இந்தியா அமைத்துள்ள இந்த தாக்குதல் அமைப்பைத்தான் உலகில் உள்ள பாதுகாப்பு துறை வல்லுனர்கள் எல்லாம் இந்தியா சீனாவுக்கு அணிவித்துள்ள வைர நெக்லஸ் என்றே கூறுகிறார்கள்..

newstm.in

Source: THE TRUE PICTURE

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close