'தவறுதலாக பத்திரிகையாளரை கொன்றோம்' - அமெரிக்காவிடம் ரகசியமாக ஒப்புக்கொள்ள சவுதி திட்டம்

  Padmapriya   | Last Modified : 16 Oct, 2018 04:29 pm
pompeo-holds-talks-with-saudi-king-on-missing-journalist-jamal-khashoggi

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் விவகாரத்தில் நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள சவுதி சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவிடம், விசாரணையின்போது கஷோகிஜியை தவறுதலாக கொன்றதாக ஒப்புக்கொள்ள சவுதி தயாராக உள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ரியாத் சென்றுள்ளார். அங்கு அவர் சவுதி  மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி விவகாரம் குறித்து பேசியதாக தெரியவந்துள்ளது.  அத்துடன் இன்று இரவு மன்னர் குடும்பத்தினருடன் பாம்பியோ இரவு உணவு உபச்சரிப்புக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது, ''விசாரணையின் போது தவறுதலாக  பத்திரிகையாளர் ஜமால் மரணமடைந்ததை ஒப்புக் கொள்ள சவுதி அரேபியா தயாராகி வருகிறது'' என சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சவுதி மன்னரிடம் இது தொடர்பாக தொலைபேசியில் உரையாடினார். பின்னர் ட்வீட் செய்த அவர், ''சவுதி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும் ஜமால் காணாமல்போன விவகாரத்தில் விடையை தேட சவுதி துருக்கியுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது. நான் இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சரை சௌதி மன்னர் சல்மானை சந்திக்க அனுப்ப இருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close