வீக்லி நியூஸுலகம்: ஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கேமரா மற்றும் கஞ்சாவை கேளிக்கையாக்கிய கனடா!

  Padmapriya   | Last Modified : 20 Oct, 2018 06:18 pm

interesting-world-news-happenings-around-the-world

ஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கேமரா!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP என்ற கேமராவை உருவாக்கியுள்ளன. இது உலகின் அதிவேகமான கேமரா என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. 

இந்த கேமரா ஒரு விநாடியில் 10 ட்ரில்லியன் ப்ரேம்களை படம்பிடிக்கும் சக்தி படைத்தது.  சுறுக்கப்பட்ட அதிதீவிரவேக படப்பிடிப்பு (Compressed Ultrafast Photography - CUP) என்ற முறையின் அடிப்படையில் இந்த கேமரா செயல்படுகிறது. 

இதன் ஸ்கேனர்களில் ஃபெம்டோ விநாடி ஸ்ட்ரீக் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நானோ விநாடியின் மில்லியன் பகுப்புகளில் ஒன்று ஒரு ஃபெம்டோ விநாடி எனப்படுகிறது.  ஒளியின் வீச்சையும் மெதுவாக்கிப் படம்பிடிக்கும் திறன் (ஸ்லோமோஷன்) இந்த கேமராவின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. 
 

360 டிகிரி கோணத்தில் ஆல்ப்ஸ் மலை
 

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் விங்சூட்டில் பறந்து ஆல்ப்ஸ் மலையின் அழகை முதன்முறையாக முழுச்சுற்று கோணத்தில் படம்பிடித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஷிப்மென் என்பவர் நைலான் ஆடைகளால் ஆன விங்சூட் முறையில் பறப்பதில் வல்லவர். இவ்வாறு பறப்பவர்கள் தலையிலோ, கழுத்திலோ கேமராவைப் பொருத்தி வைத்து வீடியோ எடுப்பது வழக்கம் ஆனால் முழுச்சுற்று கோணமான 360 டிகிரியில் சுழலும் கேமராவைப் பொருத்திய ஸ்டீவ், புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையின் 5 ஆயிரத்து 400 அடி பள்ளத்தாக்கில் குதித்தார்.

அப்போது அவரது கேமராவும் சுழன்று சுழன்று படம்பிடிக்கத் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக செயின்ட் காலின் பள்ளத்தாக்கின் அழகையும் படம் பிடித்துள்ளார்.

சீனா தயாரித்த நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய விமானம்
 

நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை தயாரித்துள்ள சீனா, அதன் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

கடலில் ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான ஏஜி 600 என்ற விமானத்தை சீனா தயாரித்தது. நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையிலான இந்த விமானம், நீரில் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது என சீனா தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த விமானம், சீனாவின் Hubei மாகாணத்தின் Jingmen பகுதியில் இருந்து முதல்முறையாக வானில் பறந்தது.

பின்னர், விமானம் வெற்றிகரமாக நீரிலும் இறக்கியும், ஓடவிட்டும் சோதிக்கப்பட்டது.

கேளிக்கைக்காக கஞ்சா பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கியது கனடா

 

னடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர். உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

போதை மருந்தை சாப்பிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுக்க காவல்துறை பிரிவுகள் எந்த வகையில் தயாராக உள்ளன என்பது பற்றி கவலைகள் எழுந்துள்ளன. புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் 15 மில்லியன் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கான விழிப்புணர்வு பரப்புரைகளும் நடத்தப்பட்டுள்ளன.

சட்டபூர்வமாக விற்கப்படும் கஞ்சாவை வாங்கி 'வரலாறு' படைக்க வேண்டுமென செயின்ட் ஜான்ஸ் நகரை சேர்ந்த இயன் பவர், அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கே வரிசையில் நின்றாராம். 

கஞ்சா விற்பனையை அனுமதிக்கும் சட்டம் கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ 2015ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் வாக்குறுதியாக வழங்கப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 

உலகிலேயே கஞ்சாவை அதிகமாக பயன்படுத்துபவர்களாக கனடர்கள் உள்ளனர்.  சுமார் நூற்றாண்டு பழமையான போதை மருந்து பயன்படுத்துவதை குற்றமாக்கும் சட்டம் செயல்திறனை இழந்துவிட்டது என்று ட்ரூடோ கூறினார். இந்த புதிய சட்டம் வயதுக்கு வராதோரிடம் போதை மருந்து கிடைப்பதை தடுத்து, குற்றவாளிகள் இதனால் லாபமடையாமல் இருக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிலவில் மனிதன் கால்பதிக்கவே இல்லையாம்..

1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.

சமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது. இந்நிலையில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நிலவின் பரப்பு போன்று காணப்படும் ஒரு இடத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் கேமராக்களை தயாராக வைப்பது தெரிகிறது. ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது இயக்குநர் ஒருவர் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இன்னொரு காட்சியில் அப்பல்லோ விண்கலம் போல் காணப்படும் ஒரு பொருளைச் சுற்றி படப்பிடிப்புக் குழுவினர் நிற்பது தெரிகிறது.ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும்போதும் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரல் ஒலிக்கிறது.

மானுட குலத்தின் ஆகச்சிறந்த அறிவியல் உச்சம் என்று கருதப்பட்டு வருவது ஏமாற்றுவேலையா என்ற எதிர்க்கருத்துக்கள் இத்தகைய வீடியோவினால் உருவாகி வருகின்றன. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.