கஷோகி படுகொலை குறித்து மன்னருக்கு தெரியாது: சவுதி வெளியுறவு அமைச்சர்

  Padmapriya   | Last Modified : 23 Oct, 2018 04:19 pm

crown-prince-was-unaware-of-khashoggi-s-death-saudi-foreign-minister-says

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது குறித்து மன்னருக்கு தெரியாது என்றும் அந்த சம்பவம் துருதஷ்டவசமானது  என்றும் சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா சென்றிருக்கும் அதெல் அல் ஜூபிர் தொலைக்காட்சி நிருபர்களிடம் கூறுகையில், "ஜமால் கஷோகி மோசமான முறையில் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து எதுவும் தெரியாது. அவரது உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. இந்தக் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய  உறுதியாகவே இருப்போம்" என்றார். சவுதி மன்னரும் தங்களது தூதரகத்தில் நடந்த இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது எனவும் இது சில அதிகாரிகளின் வரம்புமீறிய செயல் என்றும் கூறியுள்ளார்.  

இதனிடையே ஜமாலின் உடலை இஸ்தான்புல்லிலுள்ள வனப் பகுதியின் அருகே தேடும் பணியை துருக்கி அரசு மிக தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டுக்காக எழுதி வந்தார். அதில் அவர் சவுதி அரசின் தன்னாட்சிக் குறித்தும் மனனர் குடும்பத்துக்கு எதிராகவும் விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், அவர் தனது துருக்கி நாட்டுத் தோழியை திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக, சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கஷோகி சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க, துருக்கி, ஜெர்மனி என சர்வதேச நாடுகள் அழுத்தம் தந்து வந்தன.  துருக்கி நடத்திய விசாரணையின் மூலம் கஷோகி சித்திரவதை செய்யப்பட்டு தலைதுண்டித்து கொல்லப்பட்டதாக தமது விசாரணைத் தகவலை வெளியிட்டது. 

இருப்பினும் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு மறுப்புத் தெரிவித்து சமாளித்து வந்த சவுதி மன்னர் அரசு இறுதியாக கடந்த இதனை ஒப்புக்கொண்டது. அதுவும் மேலோட்டமாக, ஜமால் கஷோகி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் கொல்லப்பட்டது உண்மைதான் எனவும் தூதரகத்திற்குள் நடந்த சண்டையில் இந்த கொலை அரங்கேறியதாகவும் தெரிவித்தது.

இந்த கொலையில் தொடர்புடைய 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் உயர் புலனனாய்வு அதிகாரிகள் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உதவியாளர்களான அகமது அல்-அஸ்ஸீரியையும் அரசாங்கத்தின் ஊடக ஆலோசகர் சவுத் அல்-கட்டானி ஆகியோரை சவுதி அரேபியா பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டது.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close