மனநலம் பாதிக்கப்பட்டவர் வயிற்றிலிருந்து 112 ஆணிகள் நீக்கம்

  Padmapriya   | Last Modified : 23 Oct, 2018 04:22 pm
doctors-extract-122-nails-sharp-objects-from-mans-stomach

எத்தியோப்பியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வயிற்றிலிருந்து  112 ஆணிகள் மற்றும் சில பொருட்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டுள்ளன.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபவில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவருகிறார்.  ஆனால், அவர் கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளாமல் இருந்து வந்தது தெரியவந்தது. 

அவரை கண்காணித்த மருத்துவமனை ஊழியர்கள் சில சந்தேகங்களை எழுப்ப, அவர் எதையாவது விழுங்கியிருக்கலாம் என யூகித்து மருத்துவர்கள் அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். 

அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது அவரது வயற்றிலிருந்து 122 ஆணிகளையும் உடைந்த கண்ணாடித் துண்டுகள், டூத் பிக் உள்ளிட்ட பொருட்கள் அகற்றப்பட்டது. இவற்றை அவர் இரண்டு ஆண்டுகளாக சிறிது சிறிதாக விழுங்கியிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''ஒவ்வொறு ஆணியும் 10செ.மீ. நீளம் கொண்டவை. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் அவரது வயிற்றைக் கிழித்துவிடவில்லை. அப்படி நடந்திருந்தால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாகியிருக்கும். இதுவரை மனநலம் பாதிக்கப்படுபவர்கள் சில பொருட்களை உண்பதை பார்த்திருக்கிறோம். அதன் மூலம் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இவரது வயிற்றில் இவ்வளவு பொருட்கள் இருந்தும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இது ஆச்சரியமான விஷயம்'' என்று கூறியுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close