40 வயதில் 44 குழந்தைகள்- மனதை பதைபதைக்க வைக்கும் உகாண்டா தாய் 

  Padmapriya   | Last Modified : 23 Oct, 2018 08:24 pm
is-mariam-nabatanzi-the-most-fertile-woman-ever-the-40-year-old-from-uganda-has-44-children

உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் தனது 40 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயாகி அவர்களுக்காக வாழ்கிறார். மேலும், அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற  சிறப்பை பெற்றிருக்கிறார். 

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மரியம் நபாடன்ஸி. 40 வயது ஆகும் இவருக்கு தற்போது 44 குழந்தைகள். மரியம் நபாடன்ஸிக்கு தனது 12வது  வயதில் திருமணமானது. ஆனால் அவரது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. கணவர் மூலம் பல கொடுமைகளை அனுபவித்து ஏழ்மையில் விளிம்பில் வாழ்ந்து வந்துள்ளார். 

தனது 40 ஆண்டு கால வாழ்வில் 6 முறை இரட்டை குழந்தைகளையும், 4 முறை மூன்று குழந்தைகளையும், 3 முறை நான்கு குழந்தைகளையும் பெற்றுள்ளார். 
தனது வாழ்வில் 18 ஆண்டுகளை கர்ப்பவதியாகவே கழித்ததாகவும், 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் அவர்களை தானே வேலைக்கு சென்று காப்பாற்றி வருவதாகவும் உகாண்டா செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். 

மருத்துவர்கள் கூறுகையில், மரியத்தின் கருப்பையில் மரபியல் ரீதியாக ஏற்பட்ட மாற்றத்தின் காரணமகவே அவருக்கு அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் உற்பத்தியனாதகாவும், கருவை கலைக்க முயன்ற பொது அவரது உயிருக்கு ஆபத்தான நிலை இருந்ததால், 44 குழந்தைக்குப் பிறகு அவரது  கருப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

வினோதமான கருப்பையில் மரபியல் மாற்றத்தால் வறுமையின் விளிம்பில் இருக்கும் மரியத்திடம் சர்வதேச பத்திரிகைகள் பேட்டி காண வந்ததை அடுத்து மரியம் மிகவும் பிரபலமாகிவிட்டதாக அவரது உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close