அன்டார்டிகாவில் அபூர்வ செவ்வகப் பனிப்பாறை: நாசா படம் வெளியீடு

  Padmapriya   | Last Modified : 25 Oct, 2018 02:41 pm
that-rectangular-iceberg-spotted-by-nasa-is-real

அன்டார்டிகா கடல்பரப்பில் செவ்வக வடிவில் மாபெரும் பனிப்பாறை மிதப்பதாக அதன் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

விண்வெளிக்கு ஆய்வுக்காக நாசா அனுப்பிய விமானம் இந்தப் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. அண்டார்டிகாவில் லார்சன்-ஏ,பி,சி பனி அடுக்குகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த நாசா விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். லார்சன்-சி பனி அடுக்கில் இருந்து பிரிந்து வந்துள்ள அந்தப் பாறையின் முனைகள் கடல் அலைகளால் மழுங்கடிக்கப்படாமல் இன்னும் கூர்மையாவே காட்சியளிக்கின்றன. 

அந்த பாறையின் கூர்மையான கோணங்களும், தட்டையான மேற்பரப்பும் சமீபத்தில் தான் அது துண்டாகி வந்துள்ளதைக் குறிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பெரும்பாலும் அவ்வாறு விழும் பனிப்பாறைகள் முறையான வடிவங்களை பெற்றிருக்கும். ஆனால் இந்த பனிப்பாறை மற்ற பனிப்பாறையில் இருந்து மாறுபாடக் காரணம், இது சதுர வடிவத்தில் இருப்பதேயாகும்.  மேலும், இந்தப் பனிப்பாறையின் சரியான அளவை உறுதிசெய்ய முடியவில்லை என்ற போதிலும் இதன் அகலம் சுமார் 1.6 கி.மீ இருக்கும் என்றும் நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் இது பனிப்பாறையாக இல்லாமல் வினோத பொருளாக இருக்கலாம் என யூகித்த நாசா பின்னர் இது பனிப்பாறை தான் என உறுதி செய்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close