கிரீஸ் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

  Padmapriya   | Last Modified : 26 Oct, 2018 08:53 am
strong-6-8-magnitude-earthquake-strikes-off-greece

கிரீஸ் நாட்டில் உள்ள சுற்றுலா தீவில் 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிரீஸில்  உள்ள ஜகிந்தோஸ் என்ற சுற்றுலா தீவில் இன்று அதிகாலை  4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பெரிய அளவிலான பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்துக்கு பின்னான நில்ச்சரிவு காரணமாக மின்கம்பங்கள் பல சேதமாகி மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கிரீஸில் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் வழக்கமானவை தான். 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close