பிரதமர் மோடி பரிசளித்த கோட்: தென் கொரிய அதிபர் மகிழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 01:32 pm
pm-modi-gifts-modi-jackets-to-south-korean-president-moon-jae-in

பிரதமர் நரேந்திர மோடி அணியும் கோட் தென் கொரிய அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவர் அந்த ஜாக்கெட்டை அணிந்து புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பிரதமர் மோடி அணியும் ஜாக்கெட் தற்போது உலகளவில் பிரபலமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக, மோடி அணிவது போன்ற ஜாக்கெட்டுகள் தீபாவளி பரிசாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஒருமுறை இந்தியா வந்தபோது இந்தியாவின் பாரம்பரியமிக்க ஆடைகள் குறித்து மோடியிடம் பேசினேன். அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் அழகாக இருக்கிறார் என்றும் கூறினேன். அவர் அதனை நியாபகம் வைத்துக்கொண்டு அவர் அணிவது போன்ற ஜாக்கெட்டுகளை எனக்கு தீபாவளி பரிசாக அனுப்பியுள்ளார். அவையனைத்தும் என்னுடைய அளவுக்கு தைக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, மோடி அனுப்பி வைத்த அந்த ஜாக்கெட்டை அணிந்து புகைப்படம் எடுத்து அதனையும் தென்கொரிய அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close