வீக்லி நியூஸுலகம்: வைரலான தலையில்லாத சிறுமி மற்றும் கண்கலங்க வைக்கும் 7 வயது சிறுமியின் படம்

  Padmapriya   | Last Modified : 03 Nov, 2018 05:49 pm
interesting-world-news-happenings-around-the-world

திமிங்கலச் சுறாவிடம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

உலகின் மிகப்பெரிய மீன் இனமான திமிங்கலச் சுறாவை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்  எனப்படும் தகவல் தொடர்பு குறித்த ஒலியைப் பதிவு செய்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

ஈக்வடார் நாட்டு எல்லைக்குட்பட்ட கலபாகஸ் தீவுப் பகுதியில் கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சுமார் 45 அடி நீளமுள்ள திமிங்கலச் சுறா சென்று கொண்டிருந்தது. அதனைப் பின்தொடர்ந்து சென்ற ஆய்வாளர் ஒருவர், மனிதர்களிடம் சிசு வளர்ச்சி குறித்து கண்டறிய உதவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியை , அதன் வயிற்றுப் பகுதியில் பொருத்தி பதிவு செய்துள்ளார்.மேலும் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த சுறாவினைப் பாதுகாக்கும் பொருட்டு, அதன் உடம்பிலிருந்து ரத்தத்தையும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் 81,000 கணக்குகளின் குறுஞ்செய்திகள் ஆன்லைனில் கசிவு

ஃபேஸ்புக் மூலம் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து மாமியார்-மருமகன் சண்டை உள்பட்ட பல தனிப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 81 ஆயிரம் பயனாளர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றமும் கசிந்துள்ளது. தங்கள் நண்பருடன் பேசியது, மருமகனைப் பற்றி தோழியிடம் மாமியார் குறை கூறி புறம் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குறுஞ்செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன.

ஒரு பயனாளரின் குறுஞ்செய்தி விவரத்தை கொடுக்க ஹேக்கர்கள் 10 சென்ட் அதாவது சுமார் 7 ரூபாய் வசூலிக்கின்றனர். இதனால் ஃபேஸ்புக்கின் தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வைரலான தலையில்லாத சிறுமி 

அமெரிக்கா, அயர்லாந்து, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் அக்டோபர் 31-ம் தேதியை ஹாலோவீன் தினமாகக் கொண்டாடுகின்றன. ஹாலோவீன் தினம் என்பது அகாலமாக மரணமடைந்தவர்களின் ஆவிகளைச் சந்தோஷப்படுத்த மேற்கத்தியர்கள் கொண்டாடும் நாளாகும்.

இந்நாளில் குழந்தைகள் விதவிதமான பேய், பூதங்களின் உருவங்களில் மற்றவர்களை பயமுறுத்துவர். எலும்புக்கூடு உருவம், கண், வாயில் ரத்தம் ஒழுகும் உருவங்கள், கை கால் விரல்களில் நீண்ட நகங்கள், சூனியக்காரர்கள் என விதவிதமான வடிவங்களில் கொண்டாடி மகிழ்வர். அந்தக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

அக்ஸ்ட் 31 உலகம் முழுவதும் ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதற்காகத் தன் மகளை வித்தியாசமாக அலங்கரிக்க முடிவெடுத்தார் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கிறிஸ்டல் ஹேவாங்.  தனது 2 வயது மகள் மாயாவுக்கு தன் தலையைத் தானே வெட்டி கையில் எடுத்துக்கொண்டு நடக்கும் வகையில் மேக் அப் மூலம் வித்தியாசமான தோற்றத்தை உருவாக்கினார். அவருடன் 6 வயது மகள் சாராவை நடக்க வைத்தார்.

 

 

அதை அப்படியே வீடியோவாக எடுத்த கிறிஸ்டல், வீடியோவைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். தலையில்லாமல் நடக்கும் சிறுமியின் வீடியோவை ஏராளமான ஊடகங்கள் செய்தியாகவும், வீடியோவாகவும் வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து அந்த வீடியோ ஜப்பான், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா என உலகம் முழுவதும் வைரலாகி உள்ளது.

சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி மக்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

உள்நாட்டுப்போரை பயன்படுத்தி சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

கை கால்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள்!- பிரான்சில் விசாரணை 

பிரான்சில் கை கால்கள் இல்லாமல் கொத்து கொத்தாக குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, இதன் காரணத்தை கண்டுபிடிக்க தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு முடுக்கிவிட்டுள்ளது.

பிரான்சில் 3  இடங்களில் இவ்வாறு டஜன் கணக்கான குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.

சுவிஸ் எல்லையை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளிலும், வட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தைகளின் பிறப்புகள் தற்போது பதிவாகி உள்ளன. இதையடுத்து மீண்டும் இது குறித்து விசாரிக்கிறது பிரான்ஸ்.

Newstm.in 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close