சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இத்தாலியின் பொலாக்னா பகுதியில் சைக்கிள் ஓட்டினால் பீர் இலவசமாக வழங்கப்பட்டு வருவகிறது.
நாளுக்கு நான் அதிகரித்து வரும் காற்றுமாசு காரணத்தால் உலகில் நிகழும் மாற்றங்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றன. இதனையடுத்து மாசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இத்தாலி நாட்டில் உள்ள பொலாக்னா நகரில் சுற்றுச்சூழலை காக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பெல்லா மோசா என்ற ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவரும் சைக்கிள் ஓட்டும் நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம். அந்த புள்ளிகளுக்கு ஏற்ப சினிமா டிக்கெட்கள், பீர் என அள்ளித்தரப்படுகிறது.
உதாரணத்திற்கு 8 முறை சைக்கிளில் சென்றால் ஒரு கிளாஸ் பீர் என்ற விதத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருவர் ஒரு நாளுக்கு 4 முறை தான் பயணிக்க முடியும். இந்த திட்டத்திற்கு பொது மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.
newstm.in