அமெரிக்க பொருளாதாரத் தடைகளை முறியடிப்போம்: ஈரான் அதிபர் ஹசன் ரபானி 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 05:31 pm
iran-sanctions-rouhani-defiant-as-us-re-imposes-measures

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பெருமையாக உடைத்து எதிர்கொண்டு முறியடிப்போம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அரசு  தொலைக்காட்சியில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி, ''அமெரிக்கா பொருளாதாரத் தடையைப் பயன்படுத்தி ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக மாற்ற நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமெரிக்காவின் தடையைப் பெருமையாக உடைத்து கச்சா எண்ணெயை தொடர்ந்து மேற்கொள்வோம்.   அமெரிக்க வரலாற்றிலேயே வெள்ளை மாளிகையில் நுழைந்த நபர் ஒருவர் சட்டம் மற்றும் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளை மீறுவார் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை''  என்று கூறினார். 

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதே போல ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா விலகினாலும், ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பொருளாதாரத் தடைகள் காத்திருக்கின்றன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  அதனை முன்வைத்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நாங்கள் மீறுவோம் என்று வெளிப்படையாக ஈரான் அதிபர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close