இனிப்பு சாப்பிடும் போட்டியால் விணை: அர்ஜென்டினாவில் குத்துச்சண்டை வீரர் மரணம் 

  Padmapriya   | Last Modified : 06 Nov, 2018 05:04 pm
argentine-ex-boxer-chokes-to-death-in-food-eating-contest

அர்ஜென்டினாவில் பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை யார் அதிகம் சாப்பிடுவது என்ற போட்டியில் கலந்துகொண்ட புகழ்பெற்ற தென் அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரியோ மெலொ மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அர்ஜென்டினா நாட்டின் 'மிடியாலுனா' எனப்படும் பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை அதிகம் சாப்பிடுவது யார் என நிர்ணயிக்கும் போட்டி நடைபெற்றது.
இதில் தென் அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரியோ மெலொவும் கலந்துகொண்தார்.  அப்போது திடீரென நிகழ்ச்சி நடத்துபவரின் பின்புறம் மூச்சுத்திணறி அவர் சரிந்துவிழுந்துவிட்டதாக ஒரு உள்ளூர் தொலைக்காட்சி குறிப்பிட்டது. 

போட்டியின்போது திடீரென உதவிவேண்டி போட்டி நடத்துபவரிடம் கோபமாக சைகை செய்துள்ளார். அவரது நிலை அறிந்து பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒரு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். முதலுதவி பலனளிக்காமல் போனதால், மரியா மெலோ உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக குத்துச்சண்டை வீராங்கனையும் அவரது சகோதரியுமான ஆயிடா மெலோ கூறினார்.

மரியா மெலொ, 1980கள் மற்றும் 90களில் தென்அமெரிக்காவின் ஹெவிவெய்ட் சாம்பியனாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close