கேமரூனில் கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

  Padmapriya   | Last Modified : 08 Nov, 2018 07:40 am
cameroon-kidnap-bamenda-students-freed

ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட 77 மாணவர்களும் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பள்ளி தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் பயங்கரவாதிகள் பிடியில் வைக்கப்பட்டுள்ளார். 

மத்திய ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்ற பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதிக்கு  தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்குள் சென்ற துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 77 பேரையும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவரையும் கடத்தினர். 
 
எதற்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற விவரம் அறியப்படாமல், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது.

இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 77 பேரும் வாகான ஓட்டுனரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர்.

இந்தக் கடத்தல் திட்டத்துக்கான காரணம் மற்றும் பயங்கரவாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close