பூட்டான் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் பதவியேற்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 12:29 pm
lotay-tshering-sworn-in-as-bhutan-s-new-prime-minister

இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் இன்று பதவியேற்றார். 

பூட்டானில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டி.என்.டி. கட்சி 92,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. முன்னதாக ஆட்சி செய்த மக்கள் ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந்தது. 

பூட்டான் சட்டப்படி, அங்கு இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடைபெறும். முதல் சுற்றில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் கட்சிகளிடையே மீண்டும் தேர்தல் நடைபெறும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் ஆட்சி அமைப்பர். அதன்படியே, இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்று  டி.என்.டி. கட்சியைச் சேர்ந்த லோட்டே ஷெரிங் அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார். அவருக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நாம்கியேல் வாங்சக் பாரம்பரிய முறைப்படி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close